அருணாசலபிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லெப்ட்டினன்ட் கர்னல் ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்தின் உடல் தலைநகர் திசாப்பூரில் உள்ள இராணுவ மையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் விமானப்படை விமானம் மூலம் அவர்து சொந்த ஊரான (லெட்டினன்ட் கர்னல் ரெட்டி உடல் ஐதராபாத் கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து தெலுங்கானவில் உள்ள ஏடாட்ரி பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்படுகிறது. இதேபோல் மேஜர் ஜெயந்தின் உடல் அதே விமானம் மூலம் நேற்று இரவு மதுரை கொண்டுவரப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் அரசு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங் , மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் யாதவ், மதுரை மாநகர் வடக்கு காவல் துணை ஆணையர் அரவிந்தன், மதுரை விமான நிலைய இயக்குநர் கணேசன்,
மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன். மற்றும் முக்கிய பிரமுகர்கள் மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு மீண்டும் இன்று மதுரையிலிருந்து புறப்பட்டு பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
மேலும் செய்திகள் படிக்க - watch video: கொளுத்தும் வெயிலை சமாளிக்க அழகர்கோயில் யானைக்கு குளு, குளு குளியல் தொட்டி
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 30 ஆயிரம் முதலீடு செஞ்சா ஒரு பவுன் தங்க காசு , ரூ. 7500 லாப பணம் - மோசடி கும்பலிடம் சிக்கியவர்கள் வேதனை !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்