மதுபான கடைகளில் பார் நடத்துவதற்கான ஒப்பந்த நடைமுறைகளை கண்காணிக்க வழக்கறிஞர் ஆணையம் நியமனம் செய்ய உத்தரவிடக்கோரி வழக்கில், ஆணையம் நியமனம் செய்ய விதிமுறைகளில் இடமில்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


தூத்துக்குடியைச் சேர்ந்த சரவணகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு.


தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மார்க் மதுபான கடைகளில் மதுபான விடுதி (பார் ) நடத்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார் வருகிற 18-ஆம் தேதி ஒப்பந்தம் நடைபெற உள்ளதாகவும் அதற்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளனர். ஆனால் ஒப்பந்தம் முறையாக நடைபெறாது ஒப்பந்த விதிமுறைகளை முறையாக பின்பற்ற வழக்கறிஞர் ஆணையம் நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்..


இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு மதுபான கடைகளில் பார் நடத்துவதற்கான ஒப்பந்த நடைமுறைகளில் வழக்கறிஞர் ஆணையம் நியமிக்க முடியாது அவ்வாறு நியமனம் செய்ய  விதிகளில் இடமில்லை ஒப்பந்த விதிமுறைகளில் மாவட்ட மேலாளருக்கு தான் அதிகாரம் உள்ளது என உத்தரவிட்ட நீதிபதி, ஒப்பந்த நடைமுறைகள்  முறைகேடுகள் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க ஒப்பந்தம் நடைபெறுவதை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு முடித்து வைத்து முடித்து வைத்தார்.


 




மற்றொரு வழக்கு


ஒன்றிய அரசுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு மாநில உள்ளாட்சி அமைப்புகள்  வரி விதிக்க முடியாது - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


விருதுநகர் மாவட்ட பிஎஸ்என்எல் (BSNL)மேலாளர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே குமிளங்குளம் ஊராட்சியில் விருதுநகர் பிஎஸ்என்எல் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இது மத்திய அரசின் சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்த கட்டிடத்திற்கு வரி விதித்து ஊராட்சி மன்ற தலைவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது விதிமுறைகளுக்கு எதிரானது ஊராட்சி மன்ற தலைவரை நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் பிஎஸ்என்எல் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் நிறுவனம் ஒன்றிய அரசுக்கு சொந்தமான அலுவலக கட்டிடங்களுக்கு  மாநில உள்ளாட்சி நிர்வாகம் வரி விதிக்க முடியாது இது விதிகளுக்கு முரணானது என வாதிட்டார்.


இதைத்தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த  அலுவலகம் இன்னும் ஒன்றிய அரசின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றது. ஒன்றிய அரசிற்கு சொந்தமான கட்டிடங்களுக்கு மாநில ஊராட்சி நிர்வாகம் வரி விதிக்க முடியாது பிஎஸ்என்எல் நிறுவனம் கார்ப்பரேட் நிறுவனமாக இருந்தாலும் ஒன்றிய அரசிற்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்படுவதால் வரி விதிக்க முடியாது எதிர்காலத்தில் அந்த இடமோ கட்டிடமோ பிஎஸ்என்எல் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு பெயர் மாற்றப்பட்டால் ஊராட்சி நிர்வாகம் வரி விதிக்கலாம் என கூறி ஊராட்சி நிர்வாகம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண