ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் பயணிகளின் பயண சீட்டுகளை  தங்களிடமுள்ள அச்சிடப்பட்ட பயணிகள் பட்டியலை பார்த்து சோதனை செய்வார்கள். தற்போது இந்த பயணிகள் பட்டியல் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.






 

இதற்காக மதுரை கோட்டத்தில் பயண சீட்டு பரிசோதகர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பரிசோதனை அடிப்படையில் தேஜாஸ் விரைவு ரயில் மற்றும் பாண்டியன் விரைவு ரயில் ஆகியவற்றில் இந்த புதிய பயணச் சீட்டு சோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே அளவில் முதன்முறையாக பெண் பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு இந்த கையடக்க கணினி மதுரை கோட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.




 





 

இதன் மூலம் பயண சீட்டுகளை எளிதாக சரிபார்க்க  முடியும். பரிசோதகர்களின் செயல் திறன் மேம்படும். காலியாக உள்ள இருக்கைகள், படுக்கைகள் உடனடியாக பயணிகள் முன்பதிவு தரவு நிலையத்திற்கு அனுப்ப முடியும். இதன் மூலம் வழியில் உள்ள ரயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் இந்த காலியிடங்களை முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த வெளிப்படை தன்மையுள்ள, சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதம் இல்லா பரிசோதனை முறையை பயணிகள் அனைவரும் மகிழ்வுடன் வரவேற்கிறார்கள்.