கிரானைட் 257கோடி ரூபாய் முறைகேடு வழக்கு - மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி அழகிரி உள்ளிட்ட 12 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் - வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் - 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
மதுரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்ற துரை தயாநிதி.
கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி உரிமம் பெற்றவர்கள் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி, மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் கிரானைட் குவாரிகள் மூடப்பட்டு உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை குழு பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்திய பின்னர் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக 2013 ஆம் ஆண்டு அரசிடம் அறிக்கை சமர்பித்தது.
இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் செயல்பட தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த கிரானைட் குவாரி முறைகேடு சம்பந்தமான வழக்குகள் மேலூர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்நிலையில் கிரானைட் குவாரிகள் தொடர்பான வழக்குகள் கனிம வளக் குற்றங்களை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் நிறுவனமான ஒலம்பஸ் கிரானைட் நிறுவனம் மீதும் மதுரை மேலூர் அருகே கீழவளவு பகுதியில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.257 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2013ஆம் ஆண்டில் ஒலம்பஸ் குவாரி நிறுவனத்தின் பங்குதாரர் துரை தயாநிதி உள்ளிட்ட 14 பேர்மீது கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட துரை தயாநிதி உள்ளிட்ட 14 பேர் மீது காவல்துறையினர் 5191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 27ஆம் தேதி மேலூர் நீதிமன்றத்தில் துரை தயாநிதி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது குற்றப்பத்திரிகைகளில் நகலை பெற்றுக் கொண்ட பின்பாக இந்த வழக்கு மதுரை மாவட்ட கனிமவள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு செப்- 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கிரானைட் முறைகேடு வழக்கிற்காக நீதிபதி சிவகடாட்ஷம் முன்பாக துரைதயாநிதி உள்ளிட்ட 12 பேர் இன்று நேரில் ஆஜராகினர். இதனையடுத்து வழக்கு விசாரணைக்குவந்த போது வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் நவம்பர் -6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். துரை தயாநிதி ஆஜரான நிலையில் மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜராகிய பின்னர் நீதிமன்றத்தின் வெளியே துரை தயாநிதியிடம் அரசியல் வருகை மதுரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் புறப்பட்டு சென்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!