மதுரை மேலூர் அருகே மணப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் அதிகளவு கிராமப்புற மாணவர்கள் பயின்று வருகின்றனர். மணப்பட்டி, கச்சிரியான்பட்டி, தும்பைப்பட்டி, பால்குடி என சுற்றுவட்டார பகுதி கிராமப்புற மாணவர்கள் பயின்றுவருவது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் மணப்பட்டி கிராம பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அப்பள்ளியின் அறிவியல் பாடம் நடத்தும் ஆசிரியர் பாரதி, பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு தொல்லை அளித்ததாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வெள்ளைச்சாமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து ஆசிரியர் பாரதியை கைது செய்து மேலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினர் வட்டாரங்கள் சிலர் கூறுகையில்..,”அறிவியல் ஆசிரியர் பாரதி மாணவிகள் சிலருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். 8-க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் அதிகாரிகள் மறைமுக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவிகளுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டு வருகிறது.” எனவும் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் 17-வது சிறுமி கடத்தி செல்லப்பட்டு, பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது, மிகப்பெரும் பிரச்னையாக எழுந்தது. அதில் முக்கிய குற்றவாளி மற்றும் அவருக்கு உதவியவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மேலூர் அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் தொல்லை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அதுதான் அவரோட ஆசை... இறந்த தாய்மாமனைப்போலவே மெழுகு சிலை.. நெகிழ்ச்சியான காதணி நிகழ்வு