11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் காழ்ப்புணர்ச்சியுடன் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை முனிச்சாலை பகுதியில் அ.தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் விதிமீறல் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த அரசு அனுமதி அளித்த விவகாரம் குறித்த கேள்விக்கு, "ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்த ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வருவோம் என திமுக அல்வா கொடுத்து கொண்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக திமுக எதையும் செய்யாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்