Madurai: மதுரையில் பங்குனித் திருவிழா: பறவை காவடி, தேர் காவடி, பால்காவடி - நேர்த்திக்கடன் செலுத்திய 15 ஆயிரம் பக்தர்கள்..!

மதுரை வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் 15 ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடிகள் எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.

Continues below advertisement

மதுரை ஜெய்ஹிந்திபுரத்தில் உள்ளது மிக பழமையான ஸ்ரீ வீரகாளியம்மன் கோயில். இந்த கோயிலின் 71வது ஆண்டு பங்குனி உற்சவ விழா கொடியேற்றம் மார்ச் 17ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 31ம் தேதி மாலை காப்பும் கட்டும் நிகழ்வும் அதனை தொடர்ந்து அம்மனுக்கு தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Continues below advertisement

பங்குனி உத்திரம்:

இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்வாக இன்று அதிகாலை 5 மணி முதல் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயிலில் அலகு குத்தியும், பால் குடம் சுமந்துவந்தும், வேல்குத்தியபடியும், பறவை காவடி எடுத்தபடியும் ஊர்வலமாக வைகை ஆற்றிற்கு சென்று அங்கு அம்மனுக்கு பூஜை செய்தனர்.

 

இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேல் குத்தியபடியும், 50 க்கும் மேற்பட்டோர் 5 அடுக்கு, 3 அடுக்கு என 50 அடி முதல் 30 அடி வரை பறவை காவடி, தேர்காவடி, பால்காவடி, எடுத்தும் தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர்.15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்றதால் மாநகர் சாலைகள் முழுவதிலும் திருவிழா கோலம் பூண்டது.

 
காவடி எடுத்துசெல்லும் பக்தர்கள் தங்களது குழந்தைகள், உறவினர்களின் குழந்தைகளை கையில் எடுத்து ஆசிர்வதிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றது. இந்த விழாவினை தொடர்ந்து நாளை ஊர்ப் பொங்கல், அக்னி சட்டி, முளைப்பாரி ஊர்வலம் , 10ஆம்தேதி திருவிளக்கு பூஜையும் நடைபெறும். இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அலகு குத்தியும், மீனாட்சியம்மன், கருப்பசாமி, பத்ரகாளி வேடமணிந்தபடியும் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் பக்தி கோஷம் முழங்கியபடி காவடி எடுத்துவந்தனர்.  

 
பலத்த பாதுகாப்பு:
 
15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்ட நிலையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த விழாவின் சிறப்பாக பெரும்பாலான இளைஞர்கள் நண்பர்களுக்காக வேண்டுதல் செய்து காவடி எடுப்பதும், வேல்குத்துவதும் போன்ற நேர்த்திகடன்களை செய்வார்கள். மேலும் பெற்றோர்களுக்கு பதிலாக நண்பர்களே அருகில் இருந்து வேல்குத்துதல், காவடி எடுக்கும் உடனிருந்த அம்மனை தரிசனம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola