பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டம் முடிவில்லா தொடர் கதை என மதுரையில் ஜி.கே.வாசன் விமர்சனம் செய்துள்ளார். 


மதுரையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "பாஜகவை தோற்கடிக்க வேண்டும் எனும் நப்பாசையில் எதிர்க்கட்சிகள் பாட்னாவில் ஒன்று கூடி உள்ளன. பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டம் முடிவில்லா தொடர் கதையாக இருக்கும். பா.ஜ.கவுடன் தனித்தனியாக மோதினால் வெல்ல முடியாது என்பதால் எதிர்கட்சிகளின் ஒன்று கூடி உள்ளனர்.


Champions Trophy 2013: ஹர்பஜனால் முடியாது..! அஸ்வினால் முடியும்..! சாம்பியன்ஸ் டிராபியை வென்ற தோனியின் படை




நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயத்தினால் எதிர்கட்சிகள் ஒன்று கூடி உள்ளனர். எதிர்கட்சிகள் கூட்டம் முரண்பாட்டின் முழு வடிவமாகும். தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். அ.தி.மு.க., கூட்டணியில் விரைவில் புதிய கட்சிகள் இணைய உள்ளன. தி.மு.க.,வின் தவறான நடவடிக்கை காரணமாக அதிமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடினால் மட்டுமே சட்டம் - ஒழுங்கை காக்க முடியும். பிரதமரின் அமெரிக்க பயணம் பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்புக்கு அடித்தளமாக அமைந்துள்ளன.




எதிர்கட்சியை அமலாக்கத்துறை சோதனை செய்தால் திமுக சரி என்கிறது.  ஆளும் கட்சியை சோதனை செய்தால் தவறு என்கிறது. ஆளுநர் மீது உள்ள கால்புணர்ச்சி காரணமாக ஆளுநரின் கருத்தை திரித்து திமுகவும் அதன் கூட்டணி கட்சியும் பேசி வருகிறது, திமுக அதிக அளவில் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை எமாற்ற நினைக்கிறது, திமுக தலைமையிலான அரசு மக்கள் மீது சுமையை கொடுப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது, ஆளுநர் சட்டத்துக்கு உட்பட்டு தனது பணிகளை செய்து வருகிறார், ஆளுநரை திமுக சந்தேக பார்வையில் பார்க்கிறது" என கூறினார்.


 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.