உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நிலுவையில் உள்ள 2-வது மேல்முறையீடு மனுக்களை 58 நாட்களில் விசாரித்து முடிக்க தயாராக இருக்குமாறு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடிதம் அனுப்பி உள்ளார். உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். இவர் கடந்த 3 மாதங்களாக வழக்குகளை ரத்து செய்யக் கோருவது மற்றும் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றம் செய்யக் கோரும் குற்றவியல் மனுக்களை விசாரித்து வந்தார். அப்போது பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்தார்.

 

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு மாற்றப்படுவது வழக்கம். அதன்படி பிப்ரவரி 7 முதல்அடுத்த 3 மாதங்களுக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு 2-வதுமேல்முறையீடு மனுக்களை விசாரிக்கும் பணி வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ‘நிலுவையில் உள்ள 2-வது மேல்முறையீடு மனுக்களை விசாரித்து முடிக்கதயாராக இருங்கள், ஒத்துழைப்புதாருங்கள்’ என வழக்கறிஞர்களுக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடிதம் அனுப்பியுள்ளார்.

 

வழக்கறிஞர்களுக்கு அனுப்பியகடிதத்தில், "பிப்ரவரி 7 முதல் ஏப்ரல் 30 வரை 58 வேலைநாட்கள் உள்ளன. எனக்கு 2010 முதல் 2014 வரையிலான 2-வது மேல்முறையீடு மனுக்களை விசாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 2010-ல் 445 இரண்டாவது மேல்முறையீடு மனுக்கள் நிலுவையில் இருப்பதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. நான் வழக்கறிஞர்கள் ஒத்துழைப்புடன் அவற்றை முழுமையாக விசாரித்து முடிக்க முடிவு செய்துள்ளேன்.

 

எனவே, வழக்கறிஞர்கள் அனைவரும் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வழக்குகளின் விசாரணையை தள்ளி வைப்பது, சிறிது நேரம் நிறுத்தி வைப்பது போன்று எதையும் அனுமதிக்கப் போவதில்லை. வழக்கை விசாரணைக்கு எடுக்கும்போது வழக்கறிஞர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கால அவகாசம் குறைவாகவே உள்ளது. வழக்கறிஞர்கள் ஆதரவு அளித்தால் 445 நிலுவை வழக்குகளையும் முடிக்க நான் தயாராக உள்ளேன். தீர்ப்பு கூறிய 7 நாட்களுக்குள் தீர்ப்பு நகல் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். எனவே வழக்கறிஞர்களே 2010-ம் ஆண்டின் மேல்முறையீடு மனுக்களை பரிசீலிக்க தொடங்குங்கள். வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்"  என கடிதத்தில் நீதிபதி தெரிவித்துள்ளார். விசாரணையை தள்ளி வைப்பது, சிறிது நேரம் நிறுத்தி வைப்பதுபோன்று எதையும் அனுமதிக்கப் போவதில்லை. வழக்கறிஞர்கள் ஆதரவு அளித்தால் 445 நிலுவை வழக்குகளையும் முடிக்க நான் தயாராக உள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 



 


தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு வெளியிடங்களுக்கு செல்வதை திருச்சி மாநகர காவல் ஆணையர் தடுக்கக் கூடாது

 

கர்நாடக அரசு காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது  அணை கட்டுவதற்கு ஏற்பாடு செய்துவருகிறது. அவ்வாறு செய்தால் தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய இழப்பும், பாதிப்பும் ஏற்படும். கர்நாடக அரசின் செயல் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும், காவேரி மேலாண்மை ஒழுங்காற்றுக்குழு உத்தரவுக்கும் எதிரானதாகும்.

 

எனவே, எங்கள் சங்கத்தின் சார்பாக ஆகஸ்ட் மாதம் புதுடெல்லி சென்று காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது  அணை கட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்த திட்டமிட்டோம். இதற்காக விவசாய சங்கத்தின் உறுப்பினர்கள் 300க்கும் மேற்பட்டோர் ரயில் மூலம் டெல்லி செல்ல திட்டமிட்ட நிலையில், எங்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தோம். டெல்லி செல்ல அனுமதி வழங்கவில்லை.

 

தற்போது 2022 பிப்ரவரி 14ஆம் தேதி விவசாய பொருட்களுக்கு குறைந்த ஆதார விலை தர வேண்டும் எனவும், மேகதாது அணையில் கர்நாடகா அணை கட்டுவதை எதிர்த்து டெல்லி சென்று போராட திட்டமிட்டுள்ளோம். இதனை காவல்துறை அதிகாரிகள் தடுக்காமல், டெல்லி செல்வதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், " மனுதாரர் வெளியிடங்களுக்கு செல்வதை திருச்சி மாநகர காவல் ஆணையர் தடுக்கக் கூடாது. ஆனால் மனுதாரர் சட்டவிரோதமாகவோ, பிரச்சனைகளை ஏற்படுத்தும் விதமாகவோ செயல்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.