மதுரை அரசு மருத்துவமனை அருகே உள்ள அதிமுக அலுவலகத்தில் உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு படிவங்களை வழங்கினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பதிலளித்தார். அப்போது அவரிடம்

எடப்பாடி பழனிசாமியை பிரதமர் தனிப்பட்ட முறையில் சந்திக்காமல் சென்றது குறித்த கேள்விக்கு, "பிரதமர் கட்சி நிகழ்ச்சிக்காக வரவில்லை. அரசு நிகழ்ச்சிக்காக வந்தவர். மரியாதை நிமித்தமாக பார்த்துள்ளார். இதில் பெரிய முக்கியத்துவம் ஒன்றுமில்லை. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவித்ததால் அங்கு கனிமமோ, இராசாயன தொழிலே தொடங்க முடியாது. எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த திட்டத்தால் தான் மத்திய அரசு நிலக்கரி சுரங்க திட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது." என்றார்.



 

நிலக்கரி சுரங்கம் குறித்து அண்ணாமலை கேட்டதால் திரும்ப பெற்றதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிவிட்ட கருத்து குறித்த கேள்விக்கு, "அண்ணாமலை என்ன ஆண்டவனே கேட்டாலும் தப்பு தான். ஆண்டவனே கேட்டாலும் இத்திட்டத்தை நடத்த முடியாது.  திமுக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி கடன் வாகி உள்ளனர். 2 லட்ச கோடியில் என்ன திட்டங்களை செய்தார்கள் என்பது தி.மு.க.வுக்கே வெளிச்சம். கடன் வாங்கி உள்ளதாக நிதியமைச்சரே ஒத்துக்கொள்கிறார். தொழில்துறை அமைச்சர் 600 கோடி ரூபாயை ஸ்டான்டர்டா முறையாக வைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் டைடல் பார்க்குகளை அறிவிக்கின்றனர். முதல்வர் பிரதமரிடம் கோரிக்கைகளை வைப்பது இயல்பான ஒன்று தான்." இவ்வாறு அவர் கூறினார்.



 

நிலக்கரி சுரங்க திட்டத்தை முதல்வர் தான் திரும்பெற வைத்தார் என உதயநிதியின் கருத்து குறித்த கேள்விக்கு. உதயநிதி ஸ்டாலின் எதை தான் சொல்லவில்லை. நீட்டை முதல் கையெழுத்திலேயே ஸ்டாலின் ஒழிப்பார் என்றார். பொய்களை சொல்லி வாக்குகளை சேகரித்தார். தற்போது அப்பாவை புகழ்வது தான் உதயநிதியின் வழக்கமாக உள்ளது. கொரானாவை முதல்முதலாக வந்தபோது பொதுமக்களை காத்து கொரானாவை கட்டுப்படுத்தியவர் எடப்பாடி. தற்போது மீண்டும் அதிகராத்துள்ள கொரானாவை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்.