கேரள மாநிலம் குமுளி, கட்டப்பனை பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றின்  பரவல் அதிகரித்திருந்ததால் தொடர் பொதுமுடக்கம் தற்போதும் அமலில் இருந்து வருகிறது. இதனால் தமிழ்நாடு-கேரளா மாநில போக்குவரத்துகள் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் எல்லையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அனுப்பப்படும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் என அனைத்திற்கும் கடுமையான விலை ஏற்றத்தை கண்டுள்ளது.



கேரளாவில் தொடர்ந்து இபாஸ் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளும் நிலவி வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் விளையும் காய்கறிகள், பழங்கள் என கேரள மாநிலத்திற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஊரடங்கு வீதிகளில் இன்னும் கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில் இங்கிருந்து ஏற்றுமதியாகும் காய்கறிகள் ,பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர தொடங்கியுள்ளது. இது ஒருபுறமிருக்க கட்டுமான பொருட்களின் விலையும் கடுமையாக உயர தொடங்கியுள்ளது . வழக்கமாக ஒரு ஆண்டுக்கு கட்டுமான பொருட்கள் விலை 10 சதவீதம் வழக்கமாக உயரும். ஆனால் தற்போது கடந்த ஒரு ஆண்டிற்குள் பொருட்களின் விலை அதிகரித்து கடந்த ஒரு ஆண்டிற்குள் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.




ஒரு ஆண்டிற்கு முன்பு 350 ரூபாய்க்கு விற்ற சிமெண்ட் மூட்டை தற்போது 460 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கம்பி ரூபாய் 40 க்கு விற்றது தற்போது 80 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுபோக கட்டுமான பணிகள் தேவைப்படும் மணல், ஜல்லி ,எம் சாண்ட் , பீ சாண்ட் ஒரு யூனிட் விலை 2,500 முதல் இருந்து தற்போது 3,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. செங்கல், ஜல்லி என பல கட்டுமான பொருட்கள் தேவையான உபகரணங்கள் அனைத்தும் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. மேலும்  கட்டுமான பணியில் ஈடுபடும் தொழிலாளர் கூலியும் அதிகரித்துள்ளது. கட்டுமான பணிகள் நஷ்டம் கூலியாட்கள் சம்பள உயர்வு போன்றவற்றால் கட்டுமான ஒப்பந்த விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு சதுர அடிக்கு முன்னர் 1800 மதிப்பில் பணி நடந்தது ஆனால் தற்போது ஒரு சதுர அடி 2800 ரூபாயாக அதிகரித்து உள்ளது.



விலை ஏற்றத்தால் புதிய பணிகளைத் துவங்காமல் ஒப்பந்ததாரர்கள் உள்ள நிலையில் ஏற்கனவே குறைந்த விலைக்கு ஒப்பந்தம் செய்த ஒப்பந்ததாரர்களுக்கு ரூபாய் பல லட்சம் நஷ்டம் அடைவதாக கவலை தெரிவிக்கின்றனர். கட்டுமான பொருட்கள் விலை யாரும் எதிர்பார்க்காத அளவில் ஒரு ஆண்டில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது கட்டுமான வேலை இன்றி தொழிலாளர்கள் மாற்றும் பணியை தேடிவருகின்றனர் விலை உயர்வை தடுக்க இதனை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் கொண்டு வர வேண்டும் எனவும் அவ்வாறு செய்தால் அரசின் ஒப்புதல் பெற்ற பின்னரே பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என கட்டுமானப்பணி பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.