ஆண்டிப்பட்டி தொகுதியில் வனத்துறையால் தடைப்பட்டிருக்கும் சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றும் வனப்பகுதிகளுக்குள் பல ஆண்டுகளாக வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உறுதியளித்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட கடமலை மயிலை ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள தார் சாலைகள் வனத்துறை முட்டுக்கட்டையால் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. கடமலை மயிலை ஒன்றியத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட சாலைகள் வனத்துறை முட்டுக்கட்டையால் முழுமை பெறாமல் உள்ளது. இந்தப் பிரச்சனை குறித்து தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.
Latest Gold Silver Rate:தங்கம் வாங்க போறீங்களா?மீண்டும் குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்!
கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வருசநாடு - வாலிப்பாறை இடையே 25 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல் இருக்கும் மலைச்சாலையையும், தும்மக்குண்டு - சீலமுத்தையாபுரம் மழைச்சாலைகளை அமைச்சர் பார்வையிட்டார். ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட கடமலை மேலே ஒன்றிய பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட சாலைகளில் பல்வேறு இடங்களில் குறிப்பிட்ட பகுதிகள் வனத்துறைக்கு சொந்தமாக வருவதால் அந்தப் பகுதிகளில் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இந்தப் பகுதிகளில் சாலை அமைப்பதற்கு பண பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
சாலை அமைப்பதற்கு கொடுக்கப்படும் இடத்திற்கு மாற்றாக வனத்துறைக்கு மாற்று இடம் கொடுப்பது, சாலை அமையும் இடத்தில் மரங்கள் இருந்தால் அதனை அகற்றுவதற்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் இருப்பதால் இந்த பணிகள் இதுவரை கிடப்பில் உள்ளது. இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளேன். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் பண பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முறையாக அனுமதி பெற்று இந்த சாலைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றி தரப்படும்.
இது தவிர இந்தப் பகுதிகளில் பல ஆண்டுகளாக வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அந்த மக்களுக்கு வன பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் ஆலோசனை நடத்தி மலை கிராம மக்கள் எந்த சூழ்நிலையிலும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.