கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா மாநிலத்தில் தனியார் ஹோட்டலில் சவர்மா உணவு சாப்பிட்ட மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் அந்த ஹோட்டலில் சாப்பிட்ட பலருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டது. இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள், இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.



அதன்படி திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராம பாண்டியன் தலைமையிலான குழுவினர் பழனி பகுதியில் உள்ள உணவு விடுதிகள், தனியார் கோழி இறைச்சி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இறைச்சி உற்பத்தி சுத்திகரிப்பு பேக்கிங் செய்யும்  நிறுவனத்தில் சோதனையிட்டனர். இதைத் தொடர்ந்து பழனி நகரில் உள்ள உணவு விடுதிகளில் விற்பனை செய்யும் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது ஒரு உணவு விடுதியில் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 10 கிலோ சிக்கன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.


அனைத்து சாதியினரும் அர்ச்சகர் முதல் பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்து வரை : திமுக அரசின் சமூகநீதி செயல்பாடுகள்




மேலும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட கொடைக்கானல் சுற்றுலா தலமான பகுதியில் உணவு பாதுகாப்பு துறையினர் உணவு விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகள் என பல்வேறு இடங்களில் சோதனையிட்டனர். அப்போது ஒரு உணவு விடுதியில் சவர்மா தயார் செய்ய வைத்திருந்த ஒரு கிலோ பழைய கோழிக்கறி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் அந்த உணவு விடுதியின் உரிமையாளர் நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூபாய் 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல அப்சர்வேட்டரி ரோடு, அண்ணா சாலை உட்பட நகரில் சவர்மா விற்பனை செய்யும் உணவு விடுதிகளில் சோதனை செய்யப்பட்டது,


One year of DMK Governance : "ஓராண்டில் கடல்போன்ற சாதனை" - ஓராண்டு சாதனைகளை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..


சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் ஹோட்டலில் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரிடமும் அரைவேக்காட்டுடன் வைக்கப்பட்டிருந்த அசைவ உணவுகளை பரிமாற கூடாது எனவும் பணிபுரியும் ஊழியர்கள் கையுறை, தலை உடை ஆகியவற்றை அணிந்திருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துடன் சமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். அதுமட்டுமன்றி அசைவ உணவு கடைகளில் அதிகமாக இறைச்சி வாங்கப்படுகிறது அதில் மீதமாகும் இறைச்சி மற்றும் உணவுகளை குளிர்பதனப் பெட்டியில் வைத்து மறுநாள் விற்பனை செய்கின்றனர். ஆனால் இனி அது போல விற்பனை செய்யக்கூடாது.




கடைகளுக்கு வாங்கும் இறைச்சியின் அளவு மீதம் ஆகாத அளவிற்கு வாங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். மேலும் சில உணவகங்களில் அரைவேக்காடுடன் வைக்கப்பட்டிருந்த உணவுகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். மேலும் உணவங்களில் சாப்பிட வந்த வாடிக்கையாளர்களிடம் அடிக்கடி இது போன்ற அசைவ உணவுகள் மற்றும் துரித உணவுகளை கடைகளில் வாங்கி சாப்பிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர்.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண