மதுரை பெரியார்நிலையம் அருகே உள்ள சோலை அழகுபுரம் பகுதியை சேர்ந்த முகமது. இவரது மனைவி நேற்று மதிய உணவு சாப்பிடுவதற்காக ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள கெளரி கங்கா உணவகத்தில் சாப்பாடு பார்சல் ஒன்றை வாங்கி சென்றுள்ளார்.


இந்த நிலையில் வீட்டில் சாப்பாடு பார்சலை பிரித்து பார்த்த போது வெள்ளை சாதத்தில் பாதி உடைந்த பிளேடு துண்டு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு நேரில் சென்று கடையில் வேலை பார்த்த ஊழியர் ஞானம் என்பவரிடம் கேட்ட போது அவர் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முகமது உணவுப்பாதுகாப்புத்துறைக்கு கொடுத்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகமது மனைவி ஆர்டர் செய்த உணவை சோதனை செய்ததோடு, உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். 




அப்போது வெள்ளை சாதம் எதுவும் அங்கு வைக்கப்படாமல் இருந்துள்ளது.  மேலும் பணியாளர்களிடம் மருத்துவசான்று, தலையுறை அணியாமல் உணவுகளை சமைத்து வந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக்கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக்கொடுத்துள்ளது. மேலும் உணவுப்பாதுகாப்புத்துறை சுட்டிக்காட்டிய புகார்கள் குறித்து உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.




இது குறித்து மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயவீர பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியபோது மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பாட்டில் பிளேடு கிடந்தது குறித்து உணவுபாதுகாப்புதுறை அதிகாரிகள் நேரில் ஆய்வுமேற்கொண்டனர். ஆய்வின்போது அங்கு வெள்ளை சாதம் இல்லாத நிலையில் பிளேடு கிடந்தது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. மேலும் உணவகத்தை ஆய்வு மேற்கொண்டபோது ஊழியர்கள் தலையுறை இன்றியும், சமைக்கும் அறை உரிய பராமரிப்பு இன்றி இருப்பது தெரியவந்தது.




இதனை தொடர்ந்து உணவகத்தில் ஊழியர்கள் தலையுறை மற்றும் சமையல் இடம் முறையாக பராமரிக்கவில்லை என கூறி உணவகத்திற்கு நோட்டிஸ் அளிக்கப்பட்டது தொடர்ந்து 14 நாட்களுக்கு சரிசெய்யுமாறு அறிவுறுத்தியுள்ளோம். தொடர்ந்து கங்கா கௌரி உணவகத்தின் 3 கிளைகளின் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளோம்” என்றார் தொடர்ந்து உணவகங்களில் அதிகளவு உணவுகளில் வண்ணம் சேர்க்கும் கடைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: ''அமைச்சருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை தான் திராவிட மாடல்"- அண்ணாமலை சாடல்