திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது அடியனூத்து ஊராட்சி. இப்பகுதியில் உள்ளது நல்லாம்பட்டி. இந்த நல்லாம்பட்டி பகுதியில் முனியப்பன் கோயில் உள்ளது. இந்த முனியப்பன் கோயில் திருவிழா என்பது இப்பகுதியை சேர்ந்த சுமார் 18 கிராமப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூடி திருவிழா நடத்திவருவர் இப்பகுதியை சேர்ந்த கிராமத்தினர்.
இந்த பகுதியில் உள்ள அனைவரையும் ஒற்றுமையாக்கும் விதமாகவும் அதேபோல் குடும்ப ரீதியான சொந்த பந்தங்களை இணைக்கும் ஒரு இணைப்பு திருவிழாவாக கூடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த கோவில் திருவிழாவின் போது அப்பகுதியில் உள்ள ராஜா குளத்தில் மீன் பிடி திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்நிலையில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த மீன்பிடி திருவிழாவானது நடைபெற்றது. அதன் பிறகு மீன் பிடி திருவிழா நடைபெறவில்லை.
தற்போது இன்று (18.07.2021) கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இப்பகுதியில் உள்ள ராஜா குளத்தில் மீன்களை பிடிக்கும் திருவிழாவானது நடைபெற்றது. நல்லாம்பட்டி உட்பட 18 கிராமங்கள் உள்ளடங்கிய பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். நல்லாம்பட்டி, வாழைக்காய் பட்டி, கண்ணா பட்டி, வேடபட்டி உட்பட 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரளாக கலந்துகொண்டு ஆண்கள் ,பெண்கள், இளைஞர்கள் முதியவர்கள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தார்கள். குளத்தில் உள்ள மீன்கள் கட்லா, ஜிலேபி , ரோகு உட்பட பல்வேறு வகையான மீன்களை பிடித்தனர். சமூக விலகலைக் கடைபிடிக்காமல், தளர்வுகளை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு மீன் பிடித்து விளையாடும் மக்களைப் பார்த்தால் கொரோனா அச்சம் அதிகமாகிறது
ஒவ்வொருவரும் சுமார் 5 கிலோ முதல் 7 கிலோ வரை மீன்களை பிடித்து சென்றனர். இதில் முக்கிய நிகழ்வாக இவர்கள் பிடிக்கும் மீன்களை வீட்டில் வைத்து சமைத்து உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என சொந்த பந்தங்களை அழைத்து உணவு பரிமாறி திருவிழாவை கொண்டாடி வருகின்றனர் . நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த மீன்பிடி திருவிழா கொண்டாடப்படுவது இப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்தோஷம், கொரோனா வைரஸ் பரவலால் மறுபடியும் சோகமாக மாறிவிடக்கூடாது என்பதே கவலையான விஷயமாக உள்ளது.
தளர்வுகளை சாதகமாக்காதீர்கள். பொறுப்பின்றி இருக்காதீர்கள். முகக்கவசம் அணியுங்கள்.
மேலும் பார்க்க,
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆர்ப்பரிக்கும் சுருளி அருவி!
ஆர்ப்பரிக்கும் சுருளி Falls - கண்கொள்ளா காட்சி | Suruli falls | Flood in theni suruli water falls
பல ஊர்களில் சேகரித்த மண்ணால் ரியாலிஸ்டிக் உருவங்கள் படைக்கும் ஆசிரியர்
மேலும் படிக்க,