தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி என்ற போதும் 69 அடி முழு கொள்ளவாக கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டிய போது மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். இந்த நிலையில் ஏற்கனவே கடந்த ஒரு சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த தொடர் கனமழையால் வைகை அணை ஏற்கனவே 70 அடியை எட்டி அணைக்கு வருகிற உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது.




இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை, மூல வைகை ஆறு, போடி கொட்டக்குடி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நேற்று மாலை 6.30. மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3780கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை ஆற்று கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வருகின்ற நீரை 3780 கன அடி நீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டது.


மேலும் இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால்  அணைக்கு வினாடிக்கு 4230 கன அடிக்கும் நீர் வரத் துவங்கியது. இதனால் அணையிலிருந்து 4230 கன அடி நீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு ஒன்பது மணி அணைக்கு 5399 கன அடி நீர் வரத்து மீண்டும் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து அணையில் இருந்து 5399 கன அடி நீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது.




இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் இரவு 10 மணி நிலவரப்படி 8,846 கன அடி நீர் மேலும் அதிகரித்ததால் 8846 கன அடி நீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. மேலும் மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து அதிகமான மழை பெய்ததால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து கொண்டே இருந்தது‌. இதனால் 11 மணி நிலவரப்படி 10, 538 கன அடி நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி மீண்டும் வெள்ளை எச்சரிக்கை விடுக்கப்பட்டு 10538 கன அடி நீர் அப்படியே உபரிநீராக வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டது.


இந்த ஆண்டு வைகை அணை பலமுறை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு இருந்தாலும், முதல் முறையாக அணைக்கு அதிகப்படியான நீர்வரத்தான 10538 கன அடி உபரிநீராக வெளியேற்றப்பட்டது. 11 மணி முதல் காலை 2 மணி வரை மூன்று மணி நேரம் அணையில் இருந்து 10538 கன அடி உபரி நீர் வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.




இதனைத் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்கிற கனமழையின் அளவு படிப்படியாக குறைந்ததால் இரண்டு மணி நிலவரப்படி 7133 கன அடியாக நீர் வரத்து குறைந்தது. அணைக்கு வருகிற நீரின் அளவு குறைந்து வந்ததால் 3 மணி நிலவரப்படி 4230 கன அடி நீர் நீர்வரத்து இருந்ததால் அணையில் இருந்து தற்போது 4230 கன அடி நீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வைகை ஆற்றின் கரையோரம் உள்ள தேனி, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது எனவும் பாதுகாப்பாக இருக்கும் படியும் பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




ஒரே ஆண்டில் வைகை அணையின் நீர்மட்டம் பலமுறை 70 அடியை எட்டி உள்ளது. அதேபோல அணையின் முழு உயரமான 71 அடியை இதுவரையிலும் ஆறு முறை எட்டி உள்ளது. ஆனால் இந்த ஆண்டு முதல் முறையாக அணைக்கு வினாடிக்கு 10538 கன அடி நீர் வந்ததும், அது உபரிநீராக வெளியேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தற்போது தேனி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் வைகை அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்து, அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் மீண்டும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதால் பொதுப்பணித்துறையினர் அணை நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.