மதுரையில் ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் சுமார் 160 கோடி ரூபாய் மதிப்பில் மறு சீரமைக்கும் பணியானது, கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு 2021-ம் ஆண்டு கடைசியில் பணி முழுமையாக நிறைவடைந்து.

 


 


 


இதனை தொடர்ந்து 2021- டிசம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.  7 ஏக்கர் பரப்பளவில் சுமார் 160 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்கும் இடம் மட்டும் 55 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. இங்கே இரண்டு தரைதளங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக முதல் தரைதளத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் சுமார் 371 வாகனங்கள் நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தாகம் இரண்டாவது தளத்தில் சுமார் 4 ஆயிரத்து 861 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தாகவும்,மேலும் பயணிகளின் வசதிக்கு ஏற்ற வகையில் தாய்மார்கள் பாலுட்டும் அறை காவல் கட்டுப்பாட்டு அறை காத்திருப்பு அறைஅமைக்கபட்டுள்ளது.





 

தொடர்ந்து பேருந்து நிலையம் ஏற்கனவே செயற்பாட்டில் உள்ள நிலையில், வணிக வளாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.119 கோடியில் 474 கடைகள் கட்டப்பட்டுள்ள கட்டடம் பல்வேறு வசதிகள் உடன் திறப்பு விழா காண தயாராக இருந்து வருகிறது. இந்த நிலையில்  பெரியார் பேருந்து நிலைய வணிக வளாகத்தினுள் முதலாம், இரண்டாம் தளத்தில் நெகிழி தாள்கள், எலக்ட்ரிக் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த எளிதில் தீப்பற்றி எரியும் பொருட்களில் தீ பற்றி விபத்து ஏற்பட்டு கரும்புகை வளாகம் முழுவதும் பரவி புகை வெளியேறியது. தொடர்ந்து 2 தீயணைப்பு வாகனம் மூலம் தீதடுப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு அணைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  மேலும் விபத்து குறித்து திடீர்நகர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.