சிவகங்கை, வேப்பங்குளம் கிராமத்தில் தனியார் சோலார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ள நீர் பிடிப்புகளை மீட்டுத்தரக் கோரிய வழக்கில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக் உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது.  சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அழகரசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளம் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமா சோலார் எனர்ஜி என்கிற தனியார் நிறுவனம் விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கு செல்லும் கால்வாய்களையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- அன்பில் மகேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்த நவல்பட்டு விஜி - வழக்கை ரத்து செய்ய கோரி மனு

இதனால் அப்பகுதியில் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.  கிராமங்களில் உள்ள கால்நடை மேய்ச்சல் மற்றும் விவசாய பணிகளுக்கு உள்ள நீர் பிடிப்பு ஊரணியையும் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். எனவே தனியார் சோலார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ள நீர் பிடிப்புகளை மீட்டுத்தரக் கோரி  அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என  கூறியிருந்தார்.



மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- 150 கிலோ எடையில் தயாராகும் முப்படை தளபதி பிபின் ராவத் சிலை - நாடு முழுவதும் எடுத்து செல்ல திட்டம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, "இதுபோன்ற வழக்குகள் விளம்பர நோக்கத்திற்காகவே தாக்கல் செய்யப்படுகின்றன. மேலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். தொடர்ந்து மனுவை  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கொள்ளையடிக்க கும்பலாக சென்ற போது போலீசிடம் சிக்கிய 5 கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கைது