தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கொடைக்கானல் மலையிலிருந்து உருவாகும் வராகநதியின் குறுக்கே சோத்துப்பாறை மலைப்பகுதியில் இரு மலைகளை இணைத்து சோத்துப்பாறை அணை கட்டப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவக்கப்பட்டு 2001 ஆம் ஆண்டு பணிகள் முடிவடைந்தது. அணையின் மொத்த பரப்பளவு 357 ஏக்கர் நிலப்பரப்பளவில் 345 மீட்டர் நிலத்தில் 126.28 அடி உயரத்தில் கட்டப்பட்ட அணையாகும். அணையின் முழு கொள்ளவு 100.22 மில்லியன் கன அடியாகும். அணையின் பாசன பகுதியாக 2865 ஏக்கர் நிலங்கள் பாசனமடைந்து வருகிறது.




இந்த அணையின் மூலம் இப்பகுதி விவசாயிகள் கரும்பு, வாழை, வெற்றிலை, தென்னை, மா போன்ற விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் குடி தண்ணீருக்காக பெரியகுளம், வடுகப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், சிந்தவம்பட்டி, குள்ளப்புரம் என கிராம மக்க்ளின் குடிநீர் வசதி பெறுகிறது. அணை தற்போது அதன் முழு கொள்ளவை நிரப்ப முடியாத நிலை உள்ளது. இதற்கு காரணம் அணை கட்டுமான பணியின் போது எடுக்கப்பட்ட பாறைகள், வெட்டப்பட்ட மரங்களின் அடி பகுதி மற்றும் அணை கட்ட தோண்டப்பட்ட அடி தளத்தில் வெளி வந்த மண் இவை அனைத்தும் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் போடப்பட்டுள்ளதால் அணையில் 126அடி உயரம் வரை தண்ணிர் தேக்க முடியாத நிலை உள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதியில் எங்கு பார்த்தாலும் பாறைகள், மணல் திட்டுகள் அணையை முற்றிலும் அக்கிரிமித்துள்ளது. இதனால் மழை காலங்களில் குறைந்த அளவு தண்ணீர் தோங்கியவுடன் அணை நிரம்பி விடுகிறது.



மழை குறைவான காலங்களில் உடனே அணை வற்றிவிடுகிறது. இதனால் சோத்துப்பாறை அணை மக்களுக்கு பயன்படதாத நிலை உள்ளது. மேலும் கடந்த சிலமாதங்களாக மழையின்மையாலும் தென்மேற்கு பருவமழை சரிவர இல்லாததாலும் தற்போது அணை முற்றிலும் வரண்டுள்ளது. தற்போது அணைக்கு நீர் வரத்து முற்றிலும் குறைந்து குடிநீருக்காக தண்ணீர் வெளியேற்றம் 3 கன அடியாக உள்ளது இதனால் அணை இன்னும் ஒரு சில நாட்களில் முழுவதும் வரண்டு விடும்  நிலையில் உள்ளது.




இதனால் இப்பகுதி விவசாயிகள் விவசாய பணிகளுக்கு தேவைப்படும் தண்ணீர் முற்றிலும் இல்லாமல் போய்விடுவதாகவும், மேலும்  இப்பகுதி மக்கள் குடி தண்ணீர்க்கு பெரிதும் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் உள்ளதாகவும் கூறுகின்றனர். சோத்துப்பாறை அணை தூர்வார அரசு நிதி ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் உடனடியாக அணையை தூர்வாரியும் தற்போது பெரியகுளம் பகுதிக்கு வர இருக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சோத்துப்பாறை அணை பாசன விவசாயிகள் மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.


Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!