பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 4 கோடி ருபாய்க்கு மேல் பஞ்சாமிர்தம் விற்பனை அதிகரித்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகை தருகின்றனர். பழனி முருகன் கோவிலின் பிரசித்தி பெற்ற பிரசாதமாக பஞ்சாமிர்தம் விளங்குகிறது. மலைவாழை, கற்கண்டு, நெய், கரும்புசர்க்கரை, தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுவைமிகுந்ததாக தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் பிரசாதமானது அதிகளவில் பக்தர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலம் லட்சக்கணக்கான மக்கள் வருகை தரும் நிலையில் திருக்கோவில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம், லட்டு, அதிரசம், முறுக்கு உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு திருக்கோவில் ஊழியர்கள் வைத்து ஆங்காங்கே கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அப்படி விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்த டப்பாக்கள் விலை மூன்று வகையாக பிரிக்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை கோவில் நிர்வாகம் சார்பில் மலைக்கோவில், அடிவாரம் மங்கம்மா மண்டபம் ,அடிவாரம் தகவல் மையம், பூங்கா சாலை ,சுற்றுலா பேருந்து நிலையம், ரோப் கார் ,வின்ச், பேருந்து நிலையம் உள்ளிட்ட 13 இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்!
20 ரூபாய் 40 ரூபாய் 45 ரூபாய் என டப்பாக்கள் மூலம் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 01.07.23 முதல் 30.11.23 வரை ஐந்து மாதத்தில் பஞ்சாமிர்தம் விற்பனை 11 கோடியை 49 லட்சத்து 87ஆயிரத்து 540 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு 01.07.24. முதல் 30.11.24 வரை ஐந்து மாதத்தில் பஞ்சாமிர்த விற்பனை 15 கோடியே 86 ஆயிரத்து 19 ஆயிரத்து 125 ருபாய்க்கு விற்பனை செய்யபட்டுள்ளதாகவும், தொடர்ந்து சபரிமலை ஐயப்ப பக்தர் வருகை காரணமாக பஞ்சாமிர்த விற்பனை கடந்தாண்டை விட இந்த ஆண்டு நான்கு கோடி ருபாய்க்கு கூடுதலாக விற்பனை அதிகரித்துள்ளதாக கோவில் நிர்வாகம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.