முல்லைப் பெரியாறு அணையை நிபுணர் குழுக்கள் மூலம் மீண்டும் ஆய்வு செய்ய மத்திய நீர்வள கமிஷன் பரிந்துரை செய்ததை கண்டித்து பெரியாறு வைகை விவசாய பாசன சங்க நிர்வாகிகள் தமிழக-கேரள எல்லையில் உள்ள லோயர்கேம்ப் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.




முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக அரசு இதுவரை எந்தவித  நடவடிக்கையும்  எடுக்கவில்லை என விவசாய சங்கத்தினர் குற்றம் சாட்டினார். முல்லைப் பெரியாறு அணை பிரச்னை கடந்த சில மாதங்களாக மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியுள்ளது. கேரள மாநிலத்தில் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம், ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தமிழகப்பகுதியிலும் விவசாயிகள் போராட்டத்தை கையில் எடுத்து கேரளா அரசையும் அரசியல்வாதிகளையும்  கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனனர் .


TN Police Encounter: வெடிக்கும் தோட்டாக்கள், தொடரும் என்கவுன்டர்கள், அலறும் ரவுடிகள்.. தடாலடி போலீஸ் திட்டம்!?


கடந்த அக்.1ல் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் தனது கட்டுப்பாட்டிற்குள் முல்லைப் பெரியார் அணையை கொண்டு வர உள்ளது. இதனை அடுத்த 12 மாதத்திற்குள் நிபுணர் குழுவை வைத்து அணையை மீண்டும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர்வள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இதுபோன்ற செயல்கள் மூலம் அணை பலவீனமாக உள்ளதாக தொடர்ந்து கூறி வரும் கேரளா அரசை கண்டித்தும் மத்திய நீர்வளக் கமிஷன் பரிந்துரையை கண்டித்தும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் லோயர்கேம்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டத்தை நடத்தினார்கள். ஊர்வலமாக வந்த விவசாயிகளையும் விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.


RatioN Card KYC: நெருங்கும் டெட்லைன் - ரேஷன் அட்டை முடங்கும் அபாயம், இ-KYC ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?


அப்போது கேரள மாநிலம் குமுளி சென்று போராட்டம் நடத்த இருப்பதாக விவசாயிகள் கூறியதால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை குறித்து இதுவரை தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.


Nalla Neram Today Sep 23: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?


மேலும் கேரள அரசு புதிய அணையை கட்டுவதற்கு எடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிராக விவசாயிகள் தற்கொலை படையாக மாறி புதிய அணையை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என கூறினார். தமிழக கேரள எல்லையில் விவசாயிகள் நடத்திய இந்த முற்றுகை மற்றும் ஆர்ப்பாட்டப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் செங்குட்டு வேலவன் தலைமையிலான  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.