முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையை கேரளா அரசால் கட்ட முடியாது. பேபி அணையை பலப்படுத்த தமிழக முதல்வர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார் என பத்திரிகையாளர் சந்திப்பில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்தார்.


Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?




தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் மருத்துவர்கள் சரிவர கவனிப்பதில்லை எனவும் உரிய சிகிச்சைகள் செய்யாததால் வேறு மருத்துவமனைக்கு செல்வதாகவும் குற்றம் சாட்டி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.இந்த கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக இன்று அதிகாலை சைக்கிள் பயணமாக வந்த தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்து திடீர் ஆய்வினை மேற்கொண்டார்.அதன் பின்னர் நோயாளிகளிடம் சென்று மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் விளக்கங்களை கேட்டறிந்தார்.


காமராஜர் கொடுத்த கல்வி, மதிய உணவு! மயிலாடுதுறை எம்பி.சுதா பகிர்ந்த நெகிழ்ச்சி




அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், புதிதாக மூன்று கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய படுக்கை அறை வசதிகளுடன் புதிய கட்டிடம் அமைக்க உள்ளதாகவும் மருத்துவமனைக்கு தேவையான பணியாளர்களை புதிதாக நியமிப்பதாகவும் இரவு நேரங்களில் காவலாளி நியமித்து மருத்துவமனை பாதுகாக்கப்படும் எனவும் கூறினார்.


வழிப்பறி செய்து காதல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த புதுமாப்பிள்ளை: தட்டித் தூக்கிய போலீஸ்!


மேலும் பத்திரிகையாளர்கள் முல்லைப் பெரியாறு அணை பற்றி கேள்வி கேட்டதற்கு எந்த அரசு நினைத்தாலும் முல்லைப் பெரியாறு அணைக்கு  மாறாக புதிய அணை கட்ட முடியாது. தமிழக முதல்வர் பேபி அணையை பலப்படுத்தி முல்லைப் பெரியாறு அணையை நிலைநாட்ட தீவிரப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். என பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தகவல் தெரிவித்தார்.