மதுரை போடி இடையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மீட்டர்கேரேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டத்துக்காக கடந்த 2010-ம் ஆண்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடந்தன. தேனி வரை பணிகள் நிறைவு பெற்றதால் கடந்த ஆண்டு மதுரை-தேனி இடையே 11 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. தினமும் காலையில் மதுரையில் இருந்து புறப்பட்டு வரும் இந்த ரயில் மாலையில் தேனியில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்கிறது.


Governor RN Ravi: தமிழ்நாட்டை பிரிக்க முயற்சியா? தமிழகம் எனக் குறிப்பிட்டது ஏன்? - ஆளுநர் ரவி விளக்கம்



இந்நிலையில் தேனி,போடி இடையே அகல் ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றது. போடி வரை ரயில் சோதனை ஓட்டம் கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு ஆணையரும் ஆய்வு செய்து இந்த ரயில் பாதையில் ரயில் இயக்க ஒப்புதல் அளித்தார். இதையடுத்து மதுரையில் இருந்து தேனி வரை தினமும் இயக்கப்படும் பயணிகள் ரயிலை போடி வரை நீட்டிக்க இந்திய ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி நாளை வியாழக்கிழமை முதல் போடி வரை ரயில் நீட்டிக்கப்படுகிறது.


ராமஜெயம் கொலை வழக்கு : முதற்கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை.. துப்பு துலங்குமா?


அதன்படி தினமும் காலை 8.05 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 9.35 மணிக்கு தேனிக்கு வரும் பயணிகள் ரயில், காலை 9.42 மணிக்கு தேனியில் இருந்து போடிக்கு புறப்படுகிறது. மீண்டும் மாலை 5.50 மணிக்கு போடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அந்த ரயில் 6.15 மணிக்கு தேனிக்கு வந்தடையும். பின்னர் தேனியில் இருந்து புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை சென்றடைகிறது.



தேனியில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சென்னை-மதுரை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் போடி வரை நீட்டிக்கவும் இந்திய ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி வாரத்தில் 3 நாட்கள் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.


ராமஜெயம் கொலை வழக்கு : முதற்கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை.. துப்பு துலங்குமா?



சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில் காலை 8.20 மணிக்கு ஆண்டிப்பட்டிக்கும், 8.38 மணிக்கு தேனிக்கும், 9.35 மணிக்கு போடிக்கும் வந்தடைகிறது. அதுபோல், போடியில் இருந்து இரவு 8.30 மணிக்கு அந்த எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு தேனிக்கு இரவு 8.50 மணிக்கும், ஆண்டிப்பட்டிக்கு 9.09 மணிக்கும் வரும். மறுநாள் காலை 7.55 மணிக்கு இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும். போடி வரை பயணிகள் ரயில் நீட்டிக்கப்படுவதோடு சென்னைக்கும் எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுவது தேனி மாவட்ட மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண