தேனி மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்காலிகமாக மருத்துவமனை நிர்வாகம் உட்பட இயற்கை மருத்துவப் பிரிவு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேனி மாவட்ட பணியிடங்களுக்கு டிசம்பர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Continues below advertisement

தகுதிகள் : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் அதிகபடியான வயது வரம்பு என்பது 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மாவட்ட தர ஆலோசகர் மற்றும் ப்ரோகிராம்பர் உடன் நிர்வாக உதவியாளர் பதவிகளுக்கு 01.12.2025 தேதியின்படி, அதிகபடியாக 45 வயது வரை இருக்கலாம்.கணக்கு உதவியாளர் மற்றும் லேப் டெக்னீஷியன் பதவிக்கு 35 வயது வரை இருக்கலாம்.இடைநிலை சுகாதாரப் பணியாளர் பதவிக்கு அதிகபடியாக 50 வயது வரை இருக்கலாம்.

Continues below advertisement

கல்வித்தகுதி

  • மாவட்ட தர ஆலோசகர் பதவிக்கு பல் மருத்துவம், ஆயுஷ், நர்சிங், சமூக அறிவியல், வீட்டு அறிவியல் ஆகியவற்றில் பட்டப்படிப்பு உடன் மருத்துவ நிர்வாகத்தில் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகல் அனுபவம் தேவை.
  • நிர்வாக உதவியாளர் பதவிக்கு டிகிரியுடன் கணினி உபயோகம் தெரிந்திருக்க வேண்டும். மேலும் 1 வருட அனுபவம் தேவை.
  • கணக்கு உதவியாளர் பதவிக்கு B.COM உடன் TALLY முடித்திருக்க வேண்டும்.
  • ஆடியோமெட்ரிஷியன் பதவிக்கு 12-ம் வகுப்பு தகுதியுடன் அதற்கான சான்றிதழ் படிப்பை பெற்றிருக்க வேண்டும்.
  • ரேடியோகிராப்பர் பதவிக்கு 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • ஒடி டெக்னீஷியன் பதவிக்கு அதற்கான சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • இடைநிலை சுகாதாரப் பணியாளர் பதவிக்கு நர்சிங் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பதவிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • சீனியர் சிகிச்சை மேற்பார்வையாளர் பதவிக்கு அதற்கான டிகிரியுடன் 2 ஆண்டு சான்றிதழ் படிப்பை பெற்றிருக்க வேண்டும்.
  • லேப் டெக்னீஷியன் பதவிக்கு 12ஆம் வகுப்பு தகுதியுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • சிறப்பு கல்வியாளர் பதவிக்கு டிகிரி உடன் பி.டெட் முடித்திருக்க வேண்டும்.                                                                                                                                                                                                                                                            
  • ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பதவிக்கு இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • சமூகப் பணியாளர் பதவிக்கு முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க : தேனி மாவட்டத்தில் உள்ள சுகாதாரத்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https://theni.nic.in/notice_category/recruitment/ என்ற மாவட்ட இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பி, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று சமர்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்: கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சிறப்பு தகுதிச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ், வகுப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை

அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர்,மாவட்ட சுகாதார அலுவலகம்,பல்துறை அலுவலக வளாகம் பிளாக் எண் : 1, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,பின்பறம், தேனி - 625 531.

விண்ணப்பப்பிக்க கடைசி நாள்:  10.12.2025 மாலை 5.45 மணி வரை, நேர்காணல்  விண்ணப்பதார்களுக்கு அறிவிக்கப்படும். இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வாகும் நபர்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவார்கள்.