தமிழ்நாடு தொல்லியல் துறைத் தலைவர், தமிழ்நாடு தொல்லியல்துறை மற்ற நிபுணர்களுடன் சேர்ந்து அந்த இடத்தைப் பார்வையிட்டு, பண்டைய தமிழ் கலாச்சாரத்தைப் பற்றி சந்ததியினர் அறியும் வகையில், அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” - என உத்தரவிட்டனர்.
பழங்கால நினைவு சின்னங்களை பாதுகாக்க வேண்டும்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இரவிமங்கலத்தில் அகழாய்வு மற்றும் அறிவியல்ரீதியான ஆராய்ச்சி நடத்தவும் உத்தரவிடக்கோரி நாராயணமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில், இரவிமங்கலம் பழமையான கிராமம். இங்குள்ள சங்க கால தமிழ் கலாச்சாரத்தின் தடயங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இரவிமங்கலத்தில் அரசு உரிய அகழாய்வு நடத்தி எஞ்சியுள்ள பழங்கால நினைவு சின்னங்களை பாதுகாக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
வரலாற்று மதிப்புள்ள பொருட்கள் இன்னும் உள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு தொல்லியல் உதவி இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், பண்டைய சங்க காலத்தின் சில எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டால் எந்த தொல்பொருள் அம்சத்தையும் கண்டுபிடிக்க முடியாது எனக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள், தொல்லியல் துறை சார்பில் அந்த இடத்தில் பழங்கால எச்சங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதால் அகழாய்வு நடத்தினால் பலனிருக்காது எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் மனுதாரர் சார்பில், சில புகைப்படங்களை காண்பித்து சங்க கால கலாச்சாரத்தைப் பற்றி அறிய மிகவும் வரலாற்று மதிப்புள்ள பொருட்கள் இன்னும் உள்ளதாக கூறியுள்ளார்.
அகழ்வாராய்ச்சி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
இதனால் தமிழ்நாடு தொல்லியல் துறைத் தலைவர், தமிழ்நாடு தொல்லியல்துறை மற்ற நிபுணர்களுடன் சேர்ந்து அந்த இடத்தைப் பார்வையிட்டு, பண்டைய தமிழ் கலாச்சாரத்தைப் பற்றி சந்ததியினர் அறியும் வகையில், அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.