பழனியில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு தேவையான உரிமங்களை‌ பெற ஆகஸ்ட் 15 வரை இறுதிக்கெடு கொடுத்து காவல்துறை ஏடிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.  திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக பழனி அடிவாரம் மற்றும் நகர்ப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை தங்கும் விடுதிகளுக்கு தேவையான உரிமங்கள் மற்றும் தகுதிகள் இல்லாமல் செயல்படுகிறது.



இதன் காரணமாக அவ்வப்போது நடைபெறும் குற்றங்கள் தொடர்பாக  விசாரணை நடத்தும் பொழுது விசாரணையில் தடங்கல் ஏற்படுகிறது. கடந்தசில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து பழனிக்கு வந்த பெண் ஒருவரை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் கூறி பெரும் பரபரப்பை ஏள்படுத்தினார். விசாரணையில் பெண்‌கூறிய தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெரியவந்தது. இதனையடுத்து பழனியில் உள்ள தங்கும்‌ விடுதிகளை ஒழுங்குபடுத்தும் விதமாக விடுதி உரிமையாளர்களுடன் காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட ஏடிஎஸ்பி லாவண்யா தலைமயிலான போலீசார் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தப்பட்டது.



அப்போது அவர் தெரிவித்ததாவது:- பழனியில் உள்ள தங்கும் விடுதிகளில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என்றும், விடுதிகளில் நடைபெறும் சம்பவங்களை பதிவு செய்யும் சிசிடிவி காட்சிகளை குறைந்தது ஒரு மாதத்திற்கு சேமித்து வைக்கவேண்டும் என்றும், விடுதிகளில்  ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும்,விடுதிகளில் தங்கும் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் தொலைபேசி எண்கள் மற்றும் அடையாள அட்டைகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும், விடுதிகளில் விபச்சாரம், சூதாட்டம் உள்ளிட்ட  சட்டவிரோத நிகழ்வுகளை அனுமதிக்கக்கூடாது,



அவ்வாறு அனுமதித்தால் விடுதி உரிமையாளர்கள்‌ மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  விடுதிகளில் காவல் நிலைய தொலைபேசி எண்,  டி.எஸ்.பி ,காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்  உள்ளிட்டோரின் தொலைபேசி எண்களையும் வெளிப்படையாக எழுதி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் விடுதிகளுக்கு தேவையான அனைத்து வகை உரிமங்களையும் வருகிற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்குள் பெற்று அவற்றை விடுதிகளில் பார்வைக்கு வைக்க வேண்டும் என கெடுவிதித்தார். ஆகஸ்ட் 15-க்குள் உரிமங்கள் பெறாத விடுதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏடிஎஸ்பி லாவண்யா தெரிவித்தார். 


தேனியில் தீவிரவாதத்துடன் தொடர்பா , NIA போலிசார் விசாரணை


தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்,


தேனி: தீவிரவாத தொடர்பா? - பிரியாணி கடைக்காரரிடம் தீவிர விசாரணை செய்யும் NIA!


எச்சரிக்கும் சைபர் கிரைம் போலிஸ் ஆன்லைன் திருட்டு நடப்பது எப்படி தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்,


Cybercrime | ஆன்லைன் திருட்டு நடப்பது இப்படித்தான்... எச்சரிக்கும் போலீசார்!