சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத்திற்கு உட்பட்ட கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி துவங்கிய இந்த அகழாய்வு, செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகளவு மழைபொழிவு இருந்து வருவதால் அகழாய்வுப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுவருகிறது. தமிழர்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், அறிவுத்திறனையும் உலகுக்கு பறைசாற்றும் வகையில் விளங்குவது குறிப்பிடத்தக்கது. தற்போது கீழடியில் 8 குழிகள் வரை தோண்டப்பட்டு அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
அங்கு இதுவரை ஏராளமான அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. சிவப்பு பானை, உறைகிணறுகள், மூடியுடன் கூடிய பானை, சுடுமண் பகடை உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தந்தத்தால் செய்யப்பட்ட பகடை கண்டறியப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பகடை 4 கிராம் எடையும், 1 புள்ளி 5 செ.மீ கன சதுரமும் கொண்டு ஆறு பக்கங்களிலும் 6 புள்ளிகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதை ஆவணப்படுத்தும் பணியில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே நடைபெற்ற முதல்கட்ட அகழ்வாய்வின்போது தந்தத்தில் ஆன சீப்பு கிடைத்தது, பின்னர், 6-ஆம் நூற்றாண்டை சேர்ந்த வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் கீழடி அருகே அகரம் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாய்பில் தங்கக் கம்மல் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
இது குறித்து தொல்லியல் அதிகாரிகள் சிலர்," கீழடியில் மழைப் பொழிவு காரணமாக அகழாய்வுப் பணி இன்று மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கிடைத்ததாக சொல்லப்படும் பகடைக்காய் ஏற்கனவே கண்டறியப்பட்ட ஒன்று தான். அதனை சிலர் தற்போது கிடைத்த பகடைக்காய் என தெரிவிக்கின்றனர்" என கூறினர்.
கீழடியில் நடைபெறும் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் வரை அகழாய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !