பழனி பகுதியில் உள்ள அனைத்து அணைகளில் இருந்தும் விவசாய தேவைக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 


Imran Khan Firing: பேரணியில் நடந்த துப்பாக்கிச்சூடு - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட பலர் காயம்!




திண்டுக்கல் மாவட்டம் பழனி, கொடைக்கானல் மற்றும் அதனை  ஒட்டியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பழனி பகுதியில் உள்ள வரதமாநதி அணை, பாலாறுஅணை, பொருந்தலாறு அணை மற்றும் குதிரையாறு‌ அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் அனைத்தும் நிரம்பும் தருவாயில் உள்ள நிலையில் பழனி அருகே  பாலாறு-பொருந்தலாறு அணையின் முழு கொள்ளளவான 65அடியான முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.


Chennai Rains: ரெடியாகுங்க சென்னை மக்களே...! இன்னும் இரண்டு மணி நேரத்தில்...! அப்டேட் கொடுத்த வானிலை மையம்




இதேபோல வரதமாநதி அணையின் முழுகொள்ளவான 67அடியை எட்டியதை அடுத்து வரதாமநதி அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே வெளியேற்றப்படுகிறது. குதிரையாறு அணையின் முழுகொள்ளளவான 80அடியில் 78அடிக்கு நீர் நிரம்பியதை அடுத்து அணைக்கு வரும் நீரைன் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இந்த அணைகளில் இருந்து இன்று முதல் 120நாட்களுக்கு தொடர்ச்சியாக தண்ணீர் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை சார்பில்‌ அறிவிக்கப்பட்டுள்ளது.  


Kantara Hindi: எகிறிய வசூல்..சாதனை மேல் சாதனை.. கே.ஜி.எஃப்- ன் வாழ்நாள் சாதனையை முறியடித்த காந்தாரா..!




வைகை வடகரையில் கடும் போக்குவரத்து நெரிசல் - மழை நீரை அப்புறப்படுத்தும் பணி !


இதன் மூலம் திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அணைகளிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் சண்முகநதி ஆறு, குதிரையாறு உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.எனவே ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்லவேண்டாம் என வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண