தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்க கூடியது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. மதுரை மட்டுமில்லாமல் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையால் பயன்பெறுகின்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் கூட செய்ய முடியாத பல்வேறு முக்கிய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் அதிகளவு தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பலரும் விரைவாக குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்கிப் பயிலும் வகையில் மதுரை மதிச்சியம் பகுதியில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான விடுதி செயல்பட்டு வருகிறது, இந்த விடுதியில் சத்திரப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் பத்து வருடங்களாக பணியாற்றி வந்த நிலையில் திடீரென அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காலை எழுந்து பார்த்த சக ஊழியர்கள் செல்வம் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, காவல்துறைக்கு அளித்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதிச்சியம் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறப்புக்கான காரணம் குறித்து மதிச்சியம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தேனி : லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர் மூலம் மொத்தம் 135 மெகாவாட் மின்உற்பத்தி
மேலும் செய்திகள் படிக்க - Rain : மதுரையில் வெளுக்கத் தொடங்கிய வடகிழக்கு பருவமழை..! பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்தது..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்