திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியான மலைகளின் இளவரசி என அழைக்கப்படும்  மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை மட்டுமின்றி, பறவை, வனவிலங்குகள் உள்ளிட்டவற்றையும் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.


Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?




கொடைக்கானல் மலைப்பகுதியை பொறுத்தவரையில் 60 சதவீத பகுதிகள், வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதிகளில் அரியவகை விலங்கினங்களும், பறவை இனங்களும் உள்ளன. இந்தநிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் பறவை அணில் என்று அழைக்கப்படும் அரியவகை மலபார் அணில்கள் உள்ளன. இவை ஆங்காங்கே மட்டும் தென்பட்டு வந்தது. இதற்கிடையே தற்போது மலபார் அணில்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.


TN Rains: குடை முக்கியம் பிகிலு! 12ம் தேதி வரை தமிழ்நாட்டில் வெளுக்கப்போகும் மழை - முழு விவரம்


குறிப்பாக கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதிகளான வெள்ளி நீர்வீழ்ச்சி, புலிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள‌ மரங்களில் மலபார் அணில்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த அணில்கள் சோலை மரங்களில் இருக்கும் கொட்டாப்பழம், ஜாமூன் பழங்களை உண்டு வாழ்ந்து வருகின்றன. மேலும் சோலை மரங்களில் இருந்து பழங்களை மலபார் அணில்கள் உண்பதால், அதன் எச்சம் மூலமாக மீண்டும் வனப்பகுதியை உருவாக்குகின்றன.




கொடைக்கானல் வனப்பகுதிகளில் அரியவகை விலங்கினங்களும், பறவை இனங்களும் உள்ளன. இந்த நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சோலை மரங்களும், புல்வெளிகளுமே இயற்கையாக அமைந்தவை. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், மலைப்பகுதிகளில் நிலவிய ஈரப்பதத்தை குறைப்பதற்காக, விதைக்கப்பட்ட ஒரு வகைத்தாவர வகைகளான (MONO CULTURE PLANTS) குங்குலியம், சவுக்கு மற்றும் பைன் போன்ற மரங்கள், நமது நில வளத்திற்கு ஒவ்வாமல்,


நச்சு மரமாக மாறி, நீர் ஆதாரத்தை கெடுத்தும், புல்வெளிவெளிகளை ஆக்கிரமித்து வளார்ந்தும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்தும், வன விலங்குகளின் உணவுச்சங்கிலியை அறுத்தும் என,  தற்பொழுது அழிக்கமுடியாத அன்னிய களைக்காடுகளாக மாறியுள்ளது. இதனால், இயற்கையான சோலைக்காடுகளில் வாழும் உயிரினங்களின் ஒன்றான, மலபார் அணில் இனங்கள், கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி சென்று வருகின்றன.


Chennai Air Show: "வெயில் கொடூரமாக இருந்தது! உயிரிழப்பில் அரசியல் வேண்டாம்" அமைச்சர் மா.சுப்பிரமணியன்




20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, மலபார் அணில்களை, சாதாரணமாக சாலை ஓர நீர் நிலைகளில், எளிதாக காணமுடிந்த நிலை மாறி, தற்பொழுது சில ஆண்டுகளாக, அதனை காண்பதே அரிதாக உள்ளதாகவும் இயற்கை ஆர்வலர்கள் கவலை கூறுகின்றனர். இந்த நிலையை போக்க மலைப்பகுதிகளில் அடர்ந்து பரவியுள்ள அன்னிய மர காடுகளை, முற்றிலும் அழித்து, இயற்கையான புல்வெளிகளையும், சோலைக்காடுகளைம் திரும்ப உருவாக்க வேண்டும் என்பது, நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.