மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு தேவையான செலவீனகளுக்காக ஓரு கோடியே 2லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு தேவையான 30லட்சம் மதிப்பிலான மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்கும் 50 புதியவகை ப்ரீத் அனலைசர், ஒளிரும் பாட்டன் லைட்டுகள், ரிப்ளெக்டிவ் ஜாக்கெட், கையுறை மற்றும் ப்ளாஸ்டிக் பேரிகாட்கள் உள்ளிட்ட உபகரணங்களை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கினார்.
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள புதியவகை ப்ரீத் அனலைசரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை சோதனை செய்யும் போது ஆக்டிவ் மோட்,பாசிவ் மோட் என இரண்டு வகைகளில் சோதனை நடத்தப்படும் அதன்படி சோதனைக்கு ஒத்துழைக்காத வாகன ஓட்டிகளின் பாசிவ் மோட் மூலமாக வாகன ஓட்டியின் வாயின் அருகில் கொண்டு சென்றாலே மது அருந்தியுள்ளாரா என்பது குறித்து அறிந்துகொள்ள முடியும் ,
மேலும் ஆக்டிவ் மோட் மூலமாக ப்ரீத் அனலைசரில் ஊதும்போது வாகன ஓட்டியின் முகத்தை புகைப்படம் எடுப்பதோடு, வாகன பதிவு விவரங்கள் மற்றும் லொகேஷன் போன்ற முழு விவரங்களுடன் அபராத ரசீது கிடைக்கும் இதனை நீதிமன்றத்தில் சமர்பித்து நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் வகையில் அதி நவீன ப்ரீத் அனலைசராக பயன்படுத்தபடவுள்ளது. இந்த ப்ரீத் அனலைசரில் இருந்து அபராத ரசிதீனை வாகனத்தின் அடிப்படையில் மீண்டும் கணினி மூலமாக திரும்ப பெற்றுக்கொள்ளலாம் , ஒரு ப்ரீத் அனலைசர் இயந்திரத்தில் 1லட்சம் பதிவுகளை அப்லோட் செய்துகொள்ளும் வசதி உள்ளது.
இந்த புதிய வகை ப்ரீத் அனலைசர் நாளை முதல் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் மது அருந்தி வாகன ஓட்டுபவர்களை மருத்துவரிடம் அழைத்து செல்வது போன்ற அலைச்சல் குறைவதோடு, வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல்துறையினருக்கும் இடையேயான சுமூகதன்மை உருவாகும். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆணையர் போக்குவரத்து காவல்துறையினர் தங்களது பாதுகாப்பு கருதி சாலைகளில் நடுவில் சென்று வாகனங்களை தடுத்து நிறுத்தக்கூடாது உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியின் போது மாநகர காவல்துறை துணை ஆணையர் மோகன்ராஜ் உள்ளிட்ட மாநகர போக்குவரத்து காவல்துறையினர் கலந்துகொண்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்