கேரளாவில் பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் நாளை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் பொங்கல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று திருவனந்தபுரம் நகர பகுதியில் பல லட்சம் பெண்கள் வந்து அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.


Sudarshan Setu Bridge: கேபிள்களால் தாங்கப்படும் மிக நீளமான பாலம்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி! சுவாரஸ்ய தகவல்கள்




ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில்:


கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் ஒன்பதாவது நாள் பல லட்சம் பெண்கள் மட்டுமே ஆற்றுகால் பகவதி அம்மனுக்கு பொங்கல் பொட்டு வழிபடுவது வழக்கம். வழக்கம் போல் இந்த ஆண்டு திருவிழா இந்த மாதம் 17-ம் தேதி காப்பு கட்டி குடியிருத்தும் நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டு திருவிழா துவங்கியது.


TN Govt: தென்மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி - வெள்ள நிவாரணமாக ரூ.201.67 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை




குவிந்த பெண்கள்:


இந்த நிலையில் ஒன்பதாவது திருவிழா நாளான இன்று காலை 10.30 மணிக்கு பகவதி அம்மன் கோயிலில் அமைக்கும் பண்டார அடுப்பில் ஆலய முக்கிய அர்ச்சகர் ஆலய கருவறையில் இருந்து ஏற்றி வரும் தீபத்தை வைத்து அடுப்பில் தீ எரிய வைத்து பொங்கல் துவங்க உள்ள நிலையில் இந்த ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகள், குடியிருப்பு பகுதிகள் தோட்டங்கள், சுற்றளவுக்கு, திருவனந்தபுரம் நகரில் சாலை ஓரங்கள், வீட்டு வளாகங்கள், தெருக்கள் என்று பல இடங்களிலும் பெண்கள் கூடி பொங்கல் வைப்பார்கள். இதைத்தொடர்ந்து  ஆற்றுங்கால் கன்னியம்மன் கோவில் உங்களுக்கு மிகவும் நடைபெற உள்ளது.


Crime: சென்னையில் பயங்கரம்.. சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரை படுகொலை செய்த பெண் வீட்டார்!




இப்படி ஆண்டு தோறும் இந்த ஆலயத்தில் பொங்கல் வைப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. மதுரையை எரித்த பிறகு, கண்ணகி கேரள தேசம் சென்றதாக சொல்லப்படுகிறது. அங்கு சென்ற கண்ணகி தேவியை மன அமைதி அடையச் செய்வதற்காக பெண்கள் பலரும் அவளுக்கு பொங்கல் வைத்து நைவேத்தியம் படைப்பதாக ஐதீகம். மகிஷாசுரனை வதம் செய்த அம்பாள், பக்தர்களின் முன்பாக காட்சி தந்தாள். அவளை வரவேற்கும் விதமாக, பெண்கள் பலரும் பொங்கல் வைத்தனர். அதை நினைவுகூரும் விதமாகத்தான் இந்த பொங்கல் விழா நடைபெறுகிறது என்று மற்றொரு ஐதீகமும் சொல்லப்படுகிறது.