மாணவனை அரிவாளில் வெட்டிய நிலையில் சக பயணிகள் அலறி அடித்து ஓடினர்.

Continues below advertisement

பேருந்தில் வந்த பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு

துாத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அடுத்த அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன்  (வயது17).  பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இம்மாணவன், நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று, தேர்வு எழுதுவதற்காக, தனது ஊரில் இருந்து தனியார் பேருந்தில் தேவேந்திரன் -ஸ்ரீவைகுண்டம் சென்று கொண்டிருந்தார். கெட்டியம்மாள்புரம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, மூன்று பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்து ஏறியது. பேருந்தில் இருந்த மாணவனை கீழே இழுத்து வந்த அந்த கும்பல், அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியது. இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதைப்பார்த்த சக பயணியர் அலறி ஓட்டம் பிடித்தனர்.

சிறுவர்கள் உட்பட மூவர் கைது

தகவலறிந்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் வெட்டுக் காயங்களுடன் கிடந்த தேவேந்திரனை மீட்டு, சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் நேரில் விசாரித்தார். அரியநாயகிபுரம் மற்றும் கெட்டியம்மாள்பரம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இது குறித்து காவல்துறையினர் வெளியிட்ட தகவலில்..,” ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை மர்மநபர்கள் சிலர் கொடூரமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை, தனது மகனை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தார்.

Continues below advertisement

வழக்குப் பதிவு

இதுகுறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் Cr.No. 118/2025 u/s 296(b),127(2),109(2), 351(3) BNS r/w 3(1)(r), 3(1)(s), 3(2)(v) SC/ST POA Act 1989ன்படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், கெட்டியம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் லெட்சுமணன் (எ) பெரியவன் (19), மற்றும் 2 இளஞ்சிறார்கள் ஆகியோர்கள் சேர்ந்து மேற்படி சிறுவனை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

சிகிச்சையில் அனுமதி

உடனடியாக தனிப்படை போலீசார் லெட்சுமணன் (எ) பெரியவனை கைது செய்தும், மற்ற 2 இளஞ்சிறார்களை கையகப்படுத்தியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து முறையான விசாரணை மேற்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தாக்குதலுக்குள்ளான மேற்படி 17 வயது சிறுவன் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 14,889 பேருக்கு தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு.. எப்படி அப்ளைசெய்வது ! முழு விவரம்

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - சொந்த இடங்களை அளக்க இனி கஷ்டப்பட வேண்டாம்.. வந்தாச்சு ஈசியான வழி.. முழு விபரம் இதோ !