நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.


மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் நீட் தேர்வுக்கு எதிராக அரியலூர் மாணவி அனிதா கடந்த 2017ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முன்பு 8.9.2017ஆம் ஆண்டு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்


Watch Video | குடிக்கும் பாராக மாறிய அரசு அலுவலகம்! குவாட்டர் மற்றும் வாட்டருடன் அரசு ஊழியர்! வீடியோ!.


அதில் சில மாணவர்கள் கோயில் கோபுரம் மீது ஏறி கோஷம் எழுப்பினர். இது தொடர்பாக குருராஜ் உட்பட பலர் மீது ஸ்ரீவில்லிப்புத்தூர் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி குருராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.


இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். மாணவி அனிதா தற்கொலையால் எழுந்த உணர்ச்சி பெருக்கால் இப்போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த வழக்கு 2017-ல் பதிவு செய்த போதிலும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.


Self Respect Marriage| சமூக நீதி திருமணத்திற்கு அங்கீகாரம் கொடுக்க தனிநபர் மசோதா கொண்டு வந்த தருமபுரி எம்.பி


மேலும், போராட்டத்தின் போது மாணவர்கள் எந்தவித வன்முறையிலும் ஈடுபடவில்லை. எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த உத்தரவு வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் பொருந்தும்" என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Lata Mangeshkar Passes Away: பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரு தினங்கள் துக்கம் அனுசரிப்பு - மத்திய அரசு


High Court: குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிறந்த குழந்தை.! அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!


Self Respect Marriage| சமூக நீதி திருமணத்திற்கு அங்கீகாரம் கொடுக்க தனிநபர் மசோதா கொண்டு வந்த தருமபுரி எம்.பி