கீழடியில் கடந்த  2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2 மற்றும் 3 கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல்துறையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 4, 5, 6, 7 உள்ளிட்ட  அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல்துறையும் மேற்கொண்டனர். கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 7-ஆம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. நடைபெற்று முடிந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன. கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கீழடியில் 8-ம்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டு  பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை அகழாய்வுப் பணி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




கீழடியில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாசிகள், கற்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடை, விளையாட்டு சில்லுகள் என் ஏகப்பட்ட பொருட்கள் கிடைத்து வருகின்றனர். 8-ம் கட்ட அகழாய்வில் 400க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.





இந்நிலையில் கீழடிக்கு உட்பட்ட கொந்தகையில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடந்து வந்தது. இந்த இரண்டு குழிகளிலும் அருகே அருகே சுமார் 30 மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொந்தகையில் இதற்கு முன்பு நடந்த இரண்டு கட்ட அகழாய்வில் விட தற்போது நடந்து வரும் 3-ம் கட்ட அகழாய்வுவில் அதிகமாக முதுமக்கள் தாழிகள் தொடர்ந்து கிடைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.




 

மேலும் இந்த முதுமக்கள் தாழிகளை தொடர்ந்து அகழாய்வு செய்யும்பட்சத்தில் முதுமக்கள் தாழி உள்ளே நமது முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் அதிகமாக கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனை தொடர்ந்து கொந்தகை ,கீழடி ,அகரம் ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.