திண்டுக்கல் மாவட்டம் இடையக்கோட்டை அருகே உள்ள அத்தப்பன்பட்டியை சேர்ந்தவர் நல்லுசாமி (54). இவர், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணியின் பாதுகாப்பு பிரிவில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு இவர், அத்தப்பன்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இடையக்கோட்டை திண்டுக்கல் சாலையில் நவாலூத்து ஆதிதிராவிடர் காலனி அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.

Continues below advertisement

Election 2023 Date: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதி எப்போது - இன்று வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்?

அப்போது அங்கு சாலையில் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டிருந்தது. அதன் மீது எதிர்பாராதவிதமாக இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட நல்லுசாமி படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நல்லுசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இடையக்கோட்டை போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement


கரூர் மாவட்டம் நல்லூரான்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (37). இவருடைய மனைவி வீரம்மாள் (30). இவர்களுக்கு பிரணவ் (5) என்ற மகனும், சபர்ணா (1) என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று பிரபாகரன் தனது மனைவி, குழந்தைகளுடன் இரண்டு சக்கர வாகனத்தில் தான்தோன்றிமலைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டார். குஜிலியம்பாறையை அடுத்த கோவில்பட்டி பகுதியில் அவர்கள் வந்தபோது, முசிறியில் இருந்து பள்ளபட்டி நோக்கி வந்த மின் வேன் பிரபாகரனின் இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் மினி வேனுக்கு அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கி கொண்டது.

Governor RN Ravi: தமிழ்நாட்டை பிரிக்க முயற்சியா? தமிழகம் எனக் குறிப்பிட்டது ஏன்? - ஆளுநர் ரவி விளக்கம்

Aishwarya Rajinikanth : ‘பொங்கலோ பொங்கல்..’ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அசத்தலான பொங்கல் க்ளிக்ஸ்!

மேலும் மோட்டார் சைக்கிளை இழுத்து சென்றபடி அருகில் இருந்த பள்ளத்துக்குள் வேன் பாய்ந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரபாகரன், அவருடைய மனைவி, 2 குழந்தைகள், மினி வேனை ஓட்டி வந்த சாதிக் பாட்சா, அவருடைய மனைவி மும்தாஜ் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 6 பேரையும் மீட்டு குஜிலியம்பாறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண