தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள D.வாடிப்பட்டி ஊராட்சியின் ஆறாவது வார்டு உறுப்பினராக இருப்பவர் அழகம்மாள். இவர் அவரது வார்டு பகுதிகளில் முறையான தூய்மை பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என தொடர்ச்சியாக அதே பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் முறையிட்டு தொடர்ந்து தனது பகுதிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய வற்புறுத்தி  வந்ததாக கூறப்படுகிறது.


Rain Alert : 72 ஆண்டுகளில் 3-வது முறை.. சென்னை எந்த இடத்தில் இவ்வளவு மழை? நாளைக்கான அப்டேட் என்ன?




இந்நிலையில், ஆத்திரமடைந்த அழகம்மாளின் கணவர் கணேசன் மற்றும் அவரது நண்பரான வல்லரசு என்பவர் இருவரும் சேர்ந்து பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் வல்லரசு என்பவர் அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த துப்பாக்கி ஒன்றை எடுத்து காட்டி மிரட்டி விட்டு தனது இடுப்பில் வைத்துக் கொண்டு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.


Aruna Sairam: கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராமுக்கு செவாலியர் விருது..


இந்த சம்பவங்கள் அனைத்தையும் பாண்டியனின் உறவினர்கள் அவர்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாண்டியன் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் வல்லரசு என்பவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் தேவதானப்பட்டி காவல்துறையினர் வல்லரசு என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர் வைத்திருந்த துப்பாக்கி தீபாவளிக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி என்பது தெரியவந்தது. 


AFG vs SL T20 WC: ஹசரங்கா, தனஞ்செய டி சில்வா அபாரம்..! ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி..!

"சுயநலமாக விளையாடாதீங்க… அணிக்காக விளையாடுங்க" - வர்ணனையில் பாபர் அசாமை விமர்சித்த கம்பீர்!


இதனைத் தொடர்ந்து போலியான தீபாவளி துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தும் வகையில் மிரட்டியதன் அடிப்படையில் போலி நிருபர் வல்லரசு மற்றும் அவரை தூண்டிவிட்டு துப்பாக்கியை காட்டி மிரட்ட கூறிய ஊராட்சி மன்ற ஆறாவது வார்டு உறுப்பினரின் கணவர் கணேசன், இருவரையும் கைது செய்த காவல்துறையினர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த பின்பு பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்  ஒப்படைத்தனர்.  நீதிபதியின் உத்தரவின் பேரில் இருவரையும் நீதிமன்ற காவலில் 15 நாட்கள் வைக்க உத்தரவிட்டதன் அடிப்படையில் இருவரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண