முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி் கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த முருகன், நளினி உள்ளிட்ட 6 பேரை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. அதை பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்றனர். அதேநேரம் காங்கிரஸ் கட்சி, 6 பேரின் விடுதலையை ஏற்காமல் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

மேலும் 6 பேரையும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே திண்டுக்கல் நகரில் பல்வேறு இடங்களில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ்காந்தியின் புகைப்படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. அதில் "உங்கள் கொலையாளிகளின் விடுதலை இதயமே வலிக்கின்றது, மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. திண்டுக்கல் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் ஒட்டப்பட்டு உள்ள அந்த சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 2 வருடம் சிறை தண்டனை மற்றும்  ரூ.10,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2015 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மூக்கையா(65) என்பவரை பழனி தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு (NDPS) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  

வழக்கை விசாரணை செய்த மதுரை போதைப்பொருள் தடுப்பு (NDPS) நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி  மூக்கையா என்பவருக்கு இரண்டு வருடங்கள் சிறை தண்டனை மற்றும்  ரூ.10,000/- அபராதம் அளித்து தீர்ப்பு வழங்கினார்கள். கஞ்சா விற்பனை செய்த நபருக்கு சிறை தண்டனை வழங்கபட்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண