Dindigul to Kumily 4 Lane: திண்டுக்கல் To குமுளி வரை.. கிடைத்தது அனுமதி..சபரிமலைக்கு இனி எளிதாக செல்லலாம்..!

Dindigul to Kumily Four Lane Project: திண்டுக்கல் , குமுளி வரை நான்கு வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. டெண்டர் இறுதியானவுடன் பணிகள் துவங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

Continues below advertisement

தமிழகத்தில் குறிப்பாக மதுரை, திண்டுக்கல் உட்பட்ட தென் மாவட்டங்களில் பல்வேறு பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கொடைக்கானல், மதுரை ஆன்மீக சுற்றுலா தலங்கள்  உட்பட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது, தேனி மாவட்டம். தமிழக மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கிய மாவட்டமாகவும் தேனி மாவட்டம் உள்ளது.  இந்த மாவட்டத்தின் வழியாகவே பெரும்பாலும் கேராவிற்குள் குமுளி வழியாக மற்றும் கம்பத்தில் இருந்து கம்பம் மெட்டு வழியாக கேரள மாநிலத்தில் செல்லும் முக்கிய மலைவழிச் சாலை உள்ளது. 

Continues below advertisement

இம்மலை வழிச்சாலை வழியாகவே அதிகமானோர் கேரளாவிற்கும் தமிழகத்திற்கும் வந்து செல்கின்றனர். குறிப்பாக கேரளாவில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற உலகப் புகழ்வாய்ந்த சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் இவ்வழியாகவே பெரும்பாலும் சென்று திரும்புகின்றனர். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த தேனி நெடுஞ்சாலை வழியாக திண்டுக்கல் முதல் கொல்லம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்க ஏற்கனவே நெடுஞ்சாலைத் துறை பல்வேறு கட்ட முயற்சிகள் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது, திண்டுக்கல் முதல் கொல்லம் வரை தேசிய நெடுஞ்சாலை எண் 183 இன் கீழ் வருகிறது. திண்டுக்கல் முதல் குமுளி வரை மாநில நெடுஞ்சாலை எண் 220ன் கீழ் இருந்தது. கடந்த 2010இல் ஆய்வு செய்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், திண்டுக்கல் முதல் கொல்லம் வரை இருவழிச்சாலையாக மாற்ற பரிந்துரை செய்தனர். முன்னதாக நான்கு வழிச்சாலை என நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. வாகன போக்குவரத்தை வைத்து முடிவு எடுக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இருவழிச் சாலையாக உள்ளது. அதன் பின் அதிகரித்துள்ள வாகனப் போக்குவரத்து ஏற்பட்ட விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.


திண்டுக்கல் முதல் குமுளி வரை 125 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக மாற்ற டெண்டர் கோரும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. தேனி மாவட்டத்தை பொருத்தவரை மதுரை, கொச்சின் தேசிய நெடுஞ்சாலை எண் 85 மற்றும் திண்டுக்கல், கொல்லம் தேசிய நெடுஞ்சாலை எண் 185 என இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள்  உள்ளன. மதுரையிலிருந்து தேனி, போடி ,தேவிகுளம், மூணாறு, மூவாற்று விழா, கொச்சின் வரை எண் 85 ஆக உள்ளது. தற்போது இந்த ரோடு மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக தொண்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் முதல் குமுளி வரை நான்கு வழிச்சாலை திண்டுக்கல்லில் துவங்கி தேனி, கம்பம், குமுளி, வண்டிப்பெரியாறு, கோட்டயம் , கொல்லம் வரை உள்ளது. தற்போது திண்டுக்கல் முதல் குமுளி வரை நான்கு  வழிச்சாலையாக மாற்றப்படுவதால் இனி போக்குவரத்து எளிதாக இருக்கும். குறிப்பாக சபரிமலை சீசனில் பக்தர்கள் எளிதாக சென்று வருவார்கள் நில ஆர்ஜிதம் ஏற்கனவே செய்யப்பட்டிருப்பதால் பெரிய அளவில் பிரச்சனைகள் இருக்காது என்றும் டெண்டர் இறுதியானவுடன் பணிகள் துவங்கும் என்று ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.

Continues below advertisement
Sponsored Links by Taboola