காட்டுத்தீயை அணைக்க உதவி செய்த மலை வாழ்மக்கள் கைதா? - நடந்தது என்ன?
உதவி செய்த பழங்குடி ஆதிவாசி மக்களே மழையை விட்டு வெளியேற்றும் நோக்கத்துடனும் வனத்துறையினர் அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து வருகின்றனர் என புகார் தெரிவிக்கின்றனர் மலைவாழ் மக்கள்.

வனப்பகுதியில் எரிந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் கூறி, காட்டு தீயை அணைத்த பழங்குடியின மலைவாழ் மக்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அழைப்புச் சென்ற வனத்துறையினர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அகமலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கரும்பாறை பகுதியில் ஆதிவாசி பழங்குடியின பழியர் இன மலைவாழ் மக்கள் 16 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் கரும்பாறை கிராமத்திற்கு அருகே மூன்று கிலோமீட்டர் தொலைவில் வனப்பகுதியில் காட்டு தீ பற்றியது. இந்த நிலையில் அந்தப் பகுதியின் வனத்துறை காவலராக பணியாற்றும் ஆனந்த பிரபு என்பவர் கரும்பாரையில் குடியிருக்கும் ஆதிவாசி பழங்குடியினத்தை சேர்ந்த பாப்பையன் என்பவருக்கு தொலைபேசியில் அழைத்து உங்கள் பகுதிக்கு மேல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது, அதை அணைக்க மாட்டீர்களா எனக் கேட்டபோது தற்பொழுது வீட்டில் நான் ஒருவர் மட்டும்தான் உள்ளேன் ஒருத்தராக காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாது எனக்கூறியதாக கூறப்படுகிறது.
Erode Election Result LIVE : நாம் தமிழரை பின்னுக்கு தள்ளிய நோட்டா.. டாப்பில் திமுக
இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள முத்துக்கிருஷ்ணன் என்பவரையும் அழைத்து காட்டுத்தீயை அணைத்து அதை வீடியோ பதிவு செய்து என்னுடன் செல்போனுக்கு அனுப்புங்கள் என கேட்டுள்ளார். அப்பொழுது தன்னிடம் வீடியோ பதிவு செய்யும் அளவிற்கு போன் இல்லை எனக் கூறிய போது முத்துகிருஷ்ணன் என்பவரிடம் உள்ளது இருவரும் தீயை அணைப்பது போன்று மாறி, மாறி பதிவு செய்து எனக்கு அனுப்புங்கள் என கேட்டுள்ளார். வனத்துறையைச் சேர்ந்த ஆனந்த் பிரபு கூறியதைப் போன்று முத்துகிருஷ்ணன் மற்றும் பாப்பையா ஆகிய இருவரும் சேர்ந்து பல மணி நேரம் போராடி காட்டுத் தீயை கட்டுப்படுத்தி அந்த செல்போனில் வீடியோ பதிவு செய்து வனத்துறை ஆனந்த பிரபுவிற்கு அனுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை ஆதிவாசி பழங்குடியின மலைவாழ் மக்களான பாப்பையனை வனத்துறையைச் சேர்ந்த ஆனந்தபாபு அழைத்து ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டுகளை வாங்கிக் கொண்டு தேனியில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு வருமாறு கூறிச் சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பாப்பையனை ஆனந்த பிரபு என்ற வனத்துறை அதிகாரி தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி செல்ல வந்த பொழுது அங்கு கூடியிருந்த பழங்குடியின ஆதிவாசி மக்கள் எதற்கு அழைத்துச் செல்கிறீர்கள் என கேட்ட பொழுது விசாரணைக்கு அழைத்துச் செல்கிறோம் எனக் கூறிய போது தீயை அணைத்ததற்கு எங்களுக்கு தண்டனையா? நீங்கள் கூறி தானே காட்டுத் தீயை அணைத்தோம் என கூறினர்.
தற்பொழுது விசாரணை என்ற பெயரில் எங்கள் மீது வழக்கு பதிவு செய்வீர்களா என கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து வனத்துறை ஊழியர் ஆனந்தபாபு விசாரணைக்கு தான் அழைத்துச் செல்கிறேன் என கூறிவிட்டு அவரை அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் உதவி செய்த பழங்குடி ஆதிவாசி மக்களே மழையை விட்டு வெளியேற்றும் நோக்கத்துடனும் வனத்துறையினர் அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து வருகின்றனர் என புகார் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.