நத்தம் அருகே அண்ணன் மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்ற உறவினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே விளாம்பட்டி சேர்ந்தவர் லட்சுமணன் வயது 48, இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா வயது 35. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சங்கீதா தனது குழந்தைகளுடன் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள களத்து வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் பக்கத்து வீட்டில் குடியிருந்து வந்த லட்சுமணன் தம்பி சுரேஷ் 46 வயது என்பவர் இருந்துள்ளார்.


Erode Election Result LIVE : நாம் தமிழரை பின்னுக்கு தள்ளிய நோட்டா.. டாப்பில் திமுக


அண்ணியை வெட்டிக்கொன்ற கொழுந்தனார் - நத்தம் அருகே பயங்கரம்


சுரேஷுக்கும் சங்கீதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சுரேஷ் சங்கீதாவின் வீட்டுக்கு சென்று தனியாக இருந்த சங்கீதாவிடம் பேசியபோது அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் அங்கிருந்த அரிவாளை எடுத்து சங்கீதாவை கழுத்து மற்றும் தலையில் சரமாரியாக வெட்டி உள்ளார். இந்த நிலையில் சங்கீதா அலறியுள்ளார்.  அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.


Rock Salt: தீயாய் பரவும் தகவல், திடீரென அதிகரித்த கல் உப்பு விற்பனை - தமிழ்நாடு முழுவதும் பறந்த உத்தரவு


அவர்கள் வருவதைப் பார்த்து சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். படுங்காயம் அடைந்த சங்கீதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சங்கீதாவின் உடலை கைப்பற்றி பின்னர் பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தப்பி ஓடிய சுரேசை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.