இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும்  வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடும் நிகழ்ச்சி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.




இதில், மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில், மாவட்ட ஆட்சியர் விசாகன் கலந்துகொண்டு, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 9 லட்சத்து 8 ஆயிரத்து 812 ஆண்கள், 9 லட்சத்து 58 ஆயிரத்து 815 பெண்கள், 206 திருநங்கைகள் என மொத்தம் 18 லட்சத்து 67 ஆயிரத்து 833 வாக்காளர்கள் இடம்பெற்று இருக்கின்றனர்.


மாறி மாறி பெய்யும் மாரி, இது வேற மாறி.. என்ன நடக்குது சென்னையில...?



இந்த வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட இருக்கிறது. அதை பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்று சரிபார்த்து கொள்ளலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், புதிய வாக்காளர்கள் தங்களுடைய பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.


‘ராஜா... ராஜா.. இனி டாக்டர் ராஜா...’ - இளையராஜாவுக்கு நாளை டாக்டர் பட்டம் வழங்குகிறார் பிரதமர் மோடி!


அதேபோல் முகவரி மாற்றம், திருத்தம், பெயரை நீக்கம் செய்தல், வாக்காளர் அடையாள அட்டை நகல் பெறுதல் ஆகியவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை வாக்குச்சாவடி மையங்கள், கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து அங்கேயே வழங்கலாம்.


"ஆளுநரை கண்டு அச்சம் கொள்கிறதா ஆளுங்கட்சி" - திமுகவுக்கு அறிக்கை விட்ட வானதி


மேலும் www.nvsp.in எனும் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளம், Voters Help Line எனும் செல்போன் செயலி ஆகியவை மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சந்தேகம் இருந்தால் 1950 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகம் கேட்கலாம் என தெரிவிக்கப்படுள்ளது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண