வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கால் கிராமங்கள் முதல் நகரங்கள் வரையில் தினசரி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியிலும்  தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அதிகப்படியான தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. பழனியை அடுத்துள்ள குதிரையாறு அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரின் காரணமாக குதிரையாறு அணைக்கு கீழே அமைந்துள்ள தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த தரைப்பாலம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக பெய்த மழையின் போதும் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கியும், மண்ணை கொட்டியும் மக்கள் பயன்படுத்தும்படி சரி செய்து வைத்திருந்தனர்.




இந்த நிலையில் தற்போது மீண்டும் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக பூஞ்சோலை கிராமத்திற்கு செல்லக்கூடிய பாதை துண்டிக்கப்பட்டது.  இந்த பூஞ்சோலை கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அத்தியாவசிய தேவைக்கு உடனடியாக வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  மேலும் குதிரையாறு அணையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.




மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 26,000 கன அடியில் இருந்து 22,000 கன அடியாக குறைந்தது


அதேபோல குதிரையாறு அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தண்ணீர் வெளியேறும் இடங்களில் உள்ள பாலங்கள் நீரில் மூழ்கும்படி சென்று வருகிறது. இதனால் தரை பாலத்தை கடந்து செல்லும் நபர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த தரை  பாலத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா - திருவாரூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்



அதிமுக ஆட்சியில் வீடுகள் வழங்குவதில் முறைகேடு - பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு


இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சேதமடைந்த பாலத்தை நேரில் ஆய்வு செய்தனர். மேலும் பாலத்தை உடனடியாக சரி செய்யவும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண