நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் மதுரை அ.தி.மு.கவினரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அவர்கள் கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அ.தி.மு.க மதுரை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று விருப்ப மனுக்களை வாங்கினார். முன்னதாக சர்வ சமய வழிபாடுகளை மேற்கொண்டால் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று விருப்ப மனுக்களை வைத்து வழிபாடு நடத்திய பிறகு தெற்கு வாசல் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை ஈடுபட்டார் அதனைத் தொடர்ந்து தூய மரியன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார். எழுபத்தி இரண்டு வார்டுகளை உள்ளடக்கிய பகுதிகளுக்கு உட்பட்ட மதுரை வடக்கு தொகுதி, மேற்குத் தொகுதி ,மத்தியத் தொகுதி, தெற்கு தொகுதி மற்றும் பரவை பேரூராட்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அதிமுகவினர் திரளாக வந்திருந்து தங்களது விருப்ப மனுக்களை பெற்று சென்றனர்



 

இந்த  நிகழ்வில் முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் ராஜா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர் . பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தேர்தலில் அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெறும், அ.தி.மு.கவை வெல்ல தமிழகத்தில் எந்தவொரு சக்தியும் இல்லை என்றார். முன்னாள் எம்.எல்.ஏவும் அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினருமான மாணிக்கம் பாஜகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு, அ.தி.மு.கவுக்கு எத்தனையோ பேர் வருவார்கள், போவார்கள், அ.தி.மு.கவில் இருந்து விலகி செல்பவர்கள் குறித்து எங்களுக்கு கவலையில்லை என தெரிவித்தார்.



 

 

பாஜகவினர் வைத்த கல்வெட்டில் நயினார் நாகேந்திரனின் பெயரில் எதிர்கட்சித் தலைவர் என குறிப்பிடப்பட்டிருக்கிறதே என்ற கேள்விக்கு, பாரதிய ஜனதா கட்சி வளராத கட்சி எனவும் அ.தி.மு.கவும் ஒரு வளர்ந்த கட்சி எனவும் பாரதிய ஜனதா கட்சி வளரும் கட்சி என்பதால் அவர்கள் இதுபோன்று போட்டுக்கொள்கிறார்கள் எனவும் ஆனால் தமிழக மக்களின் பேராதரவுடன் அ.தி.மு.க தான் தமிழக எதிர்க்கட்சியாக உள்ளது. 2026 ஆம் ஆண்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என அண்ணாமலை சொல்வது அவருடைய விருப்பம், பண, அதிகார பலத்தை மீறி அ.தி.மு.க வெற்றி பெறும். அ.தி.மு.கவில் ஆட்சி காலத்தில் மக்களுக்கு தரமான அரிசி வழங்கினோம். தரமற்ற அரிசியை அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது என அமைச்சர் மூர்த்தியின் கருத்து தவறாக பேசுகிறார். அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் எந்தவொரு சலசலப்பும் நடக்கவில்லை. அமைதியான முறையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தக்காளி விலை 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட போது கூட்டுறவு அங்காடிகளில் தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.



 

கலைஞர் உணவகங்கள் தொடங்கப்படுவதில் அதிமுகவுக்கு எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை, கலைஞர் உணவகம் கொண்டு வருவதை வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம், அம்மா உணவகங்களை மறைக்காமல் கலைஞர் உணவகங்கள் செயல்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என கூறினார்.