திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறி விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.  அதே போல் விவசாயத்திற்கு பேர் போன தேனி மாவட்டத்திலும் நெல், வாழை, திராட்சை உள்ளிட்ட பயிர்களுக்கு அடுத்தபடியாக காய்கறிகளும் அதிகமாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இப்பகுதி விவசாயிகள் தக்காளி பயிரை அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர். இங்கு சாகுபடி செய்யப்படும் தக்காளிகள் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதியாகிறது. 



திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் பறிக்கப்படும் தக்காளிகள், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து வெளியூர், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. குறிப்பாக தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் விளையும் தக்காளிகள் அதிகளவில் கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதியாகி வருகிறது அதன்படி, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் மட்டும் நாள் ஒன்றுக்கு 30 முதல் 50 டன் தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.




இந்தநிலையில் கடந்த ஒருமாத காலமாக ஒட்டன்சத்திரம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் தக்காளி விளைச்சல் வெகுவாக குறைந்தது. மேலும் பல்வேறு தோட்டங்களில் மழைநீர் தேங்கியதால் தக்காளி பழங்கள் செடியிலேயே அழுகின. இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்தது. தற்போது 10 முதல் 20 டன் வரை மட்டுமே தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை  விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஒருவாரமாக தக்காளி விலை 80 ரூபாய் முதல்  100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கவலை அடைந்தனர். 




இந்த நிலையில் தேனி மாவட்டத்திலும் பருவ மழை எதிரொலி விட்டுவைக்கவில்லை அருகில் உள்ள கேரள மாநிலத்தில் அதிகமான மழை என மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது பல்வேறு பகுதிகளில் தக்காளி விளைச்சலில் பழங்கள் சேதமடைந்ததால் தக்காளி கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவிவருவதால் இன்று தேனி மாவட்டத்தில் அதிகபடியாக கிலோவிற்கு 120 ருபாய் வரையில் விற்பனையாகி வருகிறது.


AIADMK district secretaries: ஒன்றியச் செயலாளர் மாற்றத்திலிருந்து... வழிகாட்டு குழு ஏற்றம் வரை... அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன?


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர