திண்டுக்கல் அருகே விவசாய நிலத்தை அழித்து கல்குவாரி அமைக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், பல வருடங்களாக விவசாயம் செய்து வரும் நிலத்திற்கு உடனடி பட்டா வழங்கக் கோரி கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.


https://tamil.abplive.com/entertainment/jailer-second-single-released-hukum-song-lyrical-video-rajinikanth-anirudh-ravichander-129473/amp




திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குன்னத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சேர்ந்தவர்கள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள நிலத்தில் 50 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகின்றனர். பல ஆண்டுகளாக தொடர்ந்து அதே இடத்தில் குடியிருந்து வருவதாகவும் இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விவசாய நிலப் பகுதிகளை கல் குவாரிக்கு ஏலம் விட்டு விட்டதாகவும், தற்போது விவசாய நிலங்களை அழித்து கல்குவாரி அமைக்கப் போகிறோம் என்று கூறி ரவிக்குமார் என்பவர் தொடர்ந்து இப்பகுதியில் உள்ள இருவருக்கும் மேற்பட்ட விவசாயிகளை மிரட்டி வருவதாகவும் கூறி 50 லட்சம் ரூபாய்க்கு கல்குவாரிய ஏலம் எடுத்துள்ளதாக இதனால் தொடர்ந்து அப்பகுதியில் பிரச்சனை செய்து வருவதாகவும் மேலும் விருவீடு காவல் நிலையத்தில் புகார் அளித்து காவல்துறையினர் மூலம் தொடர்ந்து பிரச்சினை செய்து வருவதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


BJP Alliance: அதிர வைக்கும் பாஜக கூட்டணி.. டெல்லியில் முக்கிய கூட்டம்.. உறுதிசெய்த ஜெ. பி. நட்டா




இந்த நிலையில், அங்குள்ள குறுநில விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து நிலக்கோட்டை வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அவர்களிடம் மனு வழங்கினோம். அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தையும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் மீண்டும் எங்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.


தொடர்கள் மூன்று ஆண்டுகளாக ரவிக்குமார் எங்களை மிரட்டி வருகிறார் நாங்கள் பலமுறை காவல் நிலையத்திலும் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை மாறாக அதிகாரிகள் முன்னிலையில்  தங்களை ரவிக்குமார் என்பவர் மிரட்டு வருவதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Breaking News LIVE: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம் சிகாமணி வீட்டில் சோதனை..




பல வருடங்களாக தாங்கள் பயன்படுத்தி வரும் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும். தாங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்களைத் தொடர்ந்து மிரட்டு வருகின்றனர்.  என்று கூறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பத்துக்கு மேற்பட்ட நபர்கள் கழுத்தில் கயிறை கட்டிக்கொண்டு தூக்கு போடும் போராட்டத்தை நூதன முறையில் நடத்தினர்.  இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண