Palani Murugan temple: பழனி முருகன் கோயிலில் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று மதியம் சாமி தரிசனம் செய்வதற்காக கார் மூலமாக வருகை தந்தார்.

Continues below advertisement

பழனி முருகன் கோவிலில் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

Continues below advertisement

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று மதியம் சாமி தரிசனம் செய்வதற்காக கார் மூலமாக வருகை தந்தார்.


தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு மலைக்கோவிலுக்கு ரோப் கார் மூலமாக சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மலைக்கோவிலில் உள்ள ஆனந்த விநாயகரை வணங்கி விட்டு  பின்னர் 12 மணிக்கு உச்சி கால பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் துர்கா ஸ்டாலிக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரோப் கார் வழியாக கீழே இறங்கி புறப்பட்டு சென்றார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola