தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளை பூண்டுகளை ஏற்றி வந்த லாரியில் கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டனர். மதுரையின் பிரபல ரவுடி தார்ப்பாய் முருகன் போல் வேடசந்தூரில் சம்பவம் அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


விளையாட்டு பிரிவு.. அரசு வேலை.. ஜல்லிக்கட்டு வீரர்களுக்காக அமீர் வைத்த கோரிக்கைகள்..




திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கருக்காம்பட்டி என்ற இடத்தில் மஹாராஸ்டிர மாநிலத்திலிருந்து, தேனிமாவட்டம் வடுகபட்டிக்கு பூண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கனகராஜ் என்பவர் லாரியை ஓட்டிசென்றார். அப்போது கருக்காம்பட்டி மேம்பாலத்தில் இருந்து பூண்டு ஏற்றி வந்த லாரியில் மூன்று பேர் குதித்து பூண்டு மூட்டைகளை ஒவ்வொன்றாக கீழே தள்ளிவிட பின்புறம் வந்த இருவர் ஆம்னி வேனில் மூட்டைகளை எடுத்து அடுக்கி கொண்டே வந்தனர். அப்போது அந்த வழியே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் ரோந்து காவலர்களுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து சென்ற ரோந்து காவலர்கள் விட்டல் நாயக்கன்பட்டி என்ற இடத்தில் விரட்டி பிடித்தனர்.


India vs Uzbekistan: வெற்றிக் கணக்கைத் தொடங்குமா இந்தியா; ஆசிய கால்பந்து போட்டியில் உஸ்பெகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை




திண்டுக்கலை சேர்ந்த மணிகண்டன், தேனிமாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பிரபு ஆகிய இருவரையும் பிடித்து ஆம்னி வேன் மற்றும் 7 பூண்டு மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மூன்று பேரை வேடசந்தூர் போலீசார் தேடிவருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தல் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.