திருப்பத்தூர் அருகே சிராவயல் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் சிறுவன் உள்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சிவகங்கை மாவட்டம்,  திருப்பத்தூர் அருகே சிராவயல் கிராமத்தில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில், மொத்தம் 271 காளைகள், 81 மாடுபிடி வீரர்களுடன் மஞ்சுவிரட்டு தொடங்கியது


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் . சிராவயல் கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆஷா அஜித்  தலைமையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுபினர்  எஸ்.மாங்குடி அவர்கள் முன்னிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


போட்டியை தொடங்கிவைத்து பேசிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம் சிறாவயல் மஞ்சுவிரட்டு என்பது உலக அளவில் புகழ் பெற்றதாக திகழ்ந்து வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை எவ்வித இடையூறுன்றி சிறப்பாக தமிழகத்தில் நடத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்றார்.


பல்வேறுப் பகுதிகளிலிருந்து 272 காளைகளும், 81 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும், இப்பணியில் 8 மருத்துவக் குழுக்களும், காவல் துறையைச் சார்ந்த சுமார் 1,000 காவலர்களும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.


இந்த நிலையில், கட்டுமாடு அவிழ்கப்பட்டதில் ராகுல் 11) என்ற சிறுவன் மாடு முட்டியதில் உயிரிழந்தான். இதேபோல், அடையாளம் தெரியாத 35 வயது தக்க ஆண் உயிரிழந்தார். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் முதலுதவி அளிக்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.