வார விடுமுறை, ஓணம் பண்டிகை மற்றும் மிலாடி நபி விடுமுறை முன்னிட்டு கொடைக்கானலில் குவியும் சுற்றுலா ப‌ய‌ணிக‌ள், நகர் பகுதிகளில் சுமார் 3 கிமீ தூரம் வரை சாலையின் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து  சுற்றுலா வாகனங்கள் சென்றன.




பிரபலமான சுற்றுலா தலம்:


மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.


Watch Video : நீங்க பயன்படுத்தும் தேயிலையில் கலப்படம் இருக்கா? சுத்தமானதா? இதோ வீடியோ விளக்கம்..




அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை:


பல்வேறு பண்டிகை தினங்கள் மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு. குறிப்பாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவார்கள். வார விடுமுறை ஓணம் பண்டிகை மற்றும் மிலாடி நபி விடுமுறையை முன்னிட்டு பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இன்று காலை முதல் அதிகளவில் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக மூஞ்சிக்கள், கல்லறை மேடு ,ஏரிச்சாலை, அப்சர் வேட்டரி, உகார்த்தே நகர், செண்பகனூர் மற்றும் முக்கிய நகர் பகுதிகளில் சாலைகளின் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் அணிவித்து ஊர்ந்து செல்கின்றன, 


Atishi Singh: டெல்லி புதிய முதல்வராக அதிஷி தேர்வு; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு




இதன் காரணமாக சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்து வருகின்றனர். பண்டிகை கால விடுமுறையில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் வேளைகளில் பிரதான சாலைகளில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதைகாக உள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கு கூடுத‌லாக‌ போக்குவரத்து காவலர்களை பணியில் அமர்த்தி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.